அண்ணியுடன் தனிமையில் ... தம்பியை உருட்டுக்கட்டையால் கொடூரமாக அடித்து கொன்ற அண்ணன்

 
x

தன் மனைவியுடன் தனிமையில்  உல்லாசமாக இருந்த தம்பியை உருட்டுக்கட்டையால் கொடூரமாக அடித்து கொலை செய்திருக்கிறார் அண்ணன்.

 ஆந்திர மாநிலத்தில் திருப்பதி மாவட்டம் காக்குவாரி பாலம் கிராமம்.   இக்கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி(38).  இவரது தம்பி பிரதாப்(25).  இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வாழ்ந்து வந்துள்ளனர்.

p

இந்நிலையில்,  கடந்த 10 மாதங்களுக்கு முன்பாக பிரதாப்பின் மனைவி பிரசவத்தில் உயிரிழந்திருக்கிறார்.   இதனால் சோகத்தில் இருந்த தம்பி பிரதாப்பை தனது வீட்டிலேயே தங்க வைத்திருந்திருக்கிறார் பாலாஜி.   இதில் பிரதாப்புக்கும் அண்ணிக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது .  இருவரும் அடிக்கடி வீட்டில்  தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர் .

நேற்று முன்தினம் இரவு வீட்டில் அண்ணியுடன் பிரதாப் உல்லாசமாக இருந்திருக்கிறார்.  அப்போது திடீரென்று வந்த பாலாஜி இதை பார்த்துவிட்டு கடும் ஆத்திரமடைந்திருக்கிறார். 

 ஆவேசமடைந்த பாலாஜி,  உருட்டு கட்டையை எடுத்து தம்பி பிரதாப்பை சரமாரியாக தாக்கி இருக்கிறார்.  இதில் தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் விழுந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார் பிரதாப்.   

சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் பிரதாப் உயிரிழந்ததை பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் அளிக்க , போலீசார் விரைந்து வந்து பிரதாப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.   பாலாஜி மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர் போலீசார்.  

 தம்பி இறந்து விட்டதும் தலைமறைவாக உள்ளார் பாலாஜி.