ராகிங் கொடூரம்: மாணவியை மிரட்டி முத்தமிடும் மாணவர் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

 
rஅ

அந்த கல்லூரி மாணவியை பிளாஸ்டிக் பைப்பால் அடிப்பதாக சொல்லி மிரட்டி உட்கார வைத்து,  ஐ லவ் யூ என்று சொல்லிக்கொண்டு முத்தமிடுகிறார் ஒரு மாணவர்.   இதை  சுற்றிலும் நின்று மாணவ, மாணவிகள் வேடிக்கை பார்க்கிறார்கள்.   இந்த ராகிங் வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  இதற்கு கண்டனங்களும் வலுத்து வருகின்றன.

வ்வ்

 ஒடிசா மாநிலத்தில் பெர்காம்பூர் பஜார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பினாயக் ஆச்சார்யா கல்லூரியில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.   அந்த ராகிங் வீடியோ அங்குதான் எடுக்கப்பட்டிருக்கிறது.   அந்த மாணவியை ஐ லவ் யூ என்று சொல்லி வலுக்கட்டாயமாக முத்தமிட முயற்சிக்கிறார் அந்த மாணவர். 

 அந்த மாணவி அதை தடுத்து அங்கிருந்து வெளியேற முயற்சிக்கிறார். ஒவ்வொரு முறை அவர் முயற்சிக்கும் போதும் பிளாஸ்டிக் பைப் பால் அடிப்பதாக மிரட்டுகிறார் அந்த மாணவர்.  இதில் பயந்து கொண்டு உட்கார்ந்த அந்த மாணவியை,  ஐ லவ் யூ என்று சொல்லிக் கொண்டு அந்த மாணவர் முத்தமிடுகிறார்.  இதை சுற்றிலும் நின்று மாணவ ,மாணவிகள் ரசிக்கிறார்கள் .

இதை அடுத்து போலீசார் விசாரணை செய்து ராகிங் செய்த அந்த மாணவனை கைது செய்துள்ளனர்.  ஹர்தக்ந்தியில் உள்ள சாந்தி நகரைச் சேர்ந்த அபிஷேக் நஹத் என்பது தெரிய வந்ததும் அவரை கைது செய்துள்ளனர்.  அந்த மாணவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன என்பதும் தெரிய வந்திருக்கிறது .  

இதை அடுத்து , அந்த மாணவர் முத்தமிடும் போது அருகில் இருந்த அந்த மாணவருக்கு உடந்தையாக இருந்த மற்ற மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அவர்களையும் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.