ஆசிரியைக்கு மயக்க மருந்து கொடுத்து.. அதை வீடியோவும் எடுத்த பள்ளியின் இயக்குநர்

 
hh

தனியார் பள்ளியின் இயக்குநர் அப்பள்ளியில் பணிபுரிந்து வந்த 22 வயது ஆசிரியைக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதை வீடியோவாகவும் எடுத்து அடிக்கடி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததில் அந்த  ஆசிரியை தலைமறைவாகி இருக்கிறார்.  பெற்றோர் அளித்த புகாரில் அந்த இயக்குநர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஷாஜகான்பூர் மாவட்டம்.   அம்மாவட்டத்தில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் 22 வயது இளம்பெண் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.  கடந்த  இரண்டு மாதங்களுக்கும் முன்பாக பள்ளியின் இயக்குநர் தனது அறையில் வேலை இருப்பதாக அந்த ஆசிரியையை தனது அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.   அங்கு குளிர்பானத்தை கொடுத்து குடிக்க சொல்லி இருக்கிறார்.   குடித்த பின்னர் தான் அது மயக்க மருந்து என்பது தெரியவந்திருக்கிறது.

gg

 அந்த ஆசிரியை மயங்கியதும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.  அதை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்திருக்கிறார்.   அந்த வீடியோவை அவ்வப்போது காட்டி மிரட்டி அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்.  இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த ஆசிரியை யாருடனும் அதிகம் பேசாமல் மௌனமாகவே இருந்திருக்கிறார்.  மற்ற ஆசிரியர்கள் எல்லாரும்,  பெற்றோரும் விசாரித்ததும்  நடந்த சம்பவத்தை  சொல்லியிருக்கிறார்.

 இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியை திடீரென்று மாயமாய்  போய் இருக்கிறார்.   பள்ளியின் இயக்குனர் தான் அவரை கடத்திச் சென்று இருக்க வேண்டும் என்று பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள் .  இதை அடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பள்ளியின் இயக்குநர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.   அவர் செல்போனில் இருந்து வீடியோவும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.  அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதற்கு இடையில் காணாமல் போன ஆசிரியை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.