ஆதரவற்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவாக இருந்த பாதிரியார் கைது

 
சார்லஸ்

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ், வயது.58, அப்பகுதியில் கிறிஸ்துவ ஆதரவற்றோர் காப்பகம் ஒன்றை  நடத்தி வந்தார். அதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதரவற்ற சிறுவர்கள் தங்கி படித்து வந்தனர். அப்போது அங்கு விடுதியில் தங்கி இருந்த சிறுமி கீதா என்பவரிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் இதில் கற்பமான அந்த சிறுமிக்கு 2019 ல் குழந்தையும்  பிறந்துள்ளது.

சிறுமியையும் குழந்தையையும் அழைத்து சென்று சென்னை ராஜமங்கலத்தில் உள்ள பெண் ஒருவரிடம் அடைக்கலமாக விட்டுவிட்டு சென்றுள்ளார் .அதன்  பின்னர் எந்த தொடர்பும் இல்லாததால் அப்பெண் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சார்லஸ் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு பிறகு நேற்று சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுகொண்டிருப்பதாக போலீசாருக்கு இரகசிய தகவல் வந்துள்ளது அதன் அடிப்படையில் கோயம்பேடு போலீசாரின் உதவியுடன் சார்லசை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்து மாமல்லபுரம் டி எஸ் பி ஜெகதீஸ்வரன் மற்றும் மகளீர் காவல் ஆய்வாளர் கீதாலட்சுமி ஆகியோர் தலைமையில் விசாரணை நடத்தி  சார்லஸ் மீது இந்திய தண்டனை சட்டம்  போக்ஸோ, பிரிவுவின் கீழ்  வழக்கு பதிவு செய்து இன்று சிறையில் அடைத்தனர். ஓராண்டு காலமாக போலீசாருக்கு ஆட்டம் காட்டி வந்த போக்ஸோ குற்றவாளியான மதபோதகர்  சென்னையில் பிடிபட்டதால்., கல்பாக்கம், வாயலூர் பகுதியில் பரபரப்பு கானப்பட்டது.