அக்காவுடன் உல்லாசமாக இருந்தபோது துண்டு துண்டாக வெட்டிய தம்பி! திமுக பிரமுகரின் தலையை தேடும் போலீஸ்

 
b

அக்காவுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்து விட்ட தம்பி ஆத்திரத்தில் அந்த திமுக பிரமுகரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி தலையை அடையாறு ஆற்றில் வீசியிருக்கிறார்.  போலீசார் தலையை தேடி வருகின்றனர்.

 சென்னை அடுத்த மணலி பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி.  திருவொற்றியூர் ஏழாவது வார்டு திமுக வட்ட பிரதிநிதியான இவர் வட்டிக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.   இவரை கடந்த பத்தாம் தேதி முதல் காணவில்லை என்று அவரது மகன் நாகேந்திரன் மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 சக்கரபாணி பயன்படுத்தி வந்த செல்போன் ராயபுரத்தில் கல் மண்டபம் கிரேஸ் கார்டன் மூணாவது தெருவை காட்ட,  போலீசார் அங்கு விரைந்து சென்றபோது,  அங்கே சக்கரபாணியின் இருசக்கர வாகனம் நின்றிருக்கிறது.

ப்ப்

இதற்கிடையில்,  சக்கரபாணியுடன் கடைசியாக பேசிய நபர்கள் யார் என்பதை கண்டுபிடித்தபோது டில்லி பாபு என்பவரை சந்தேகத்தில் விசாரித்துள்ளனர்.   அவர் ரேஸ் கார்டன் மூன்றாவது தெருவிற்கு தமீம் பானு என்பவர் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார் சக்கரபாணி என்பதை சொல்லி இருக்கிறார்.  உடனடியாக தமிம் பானு வீட்டிற்கு சென்ற போலீசார்,  கதவை தட்டிய போது உள்ளே இருந்து கொண்டு கதவை திறக்கவில்லை . அவர்கள் உடைக்கும் அளவிற்கு  வெகுநேரமாக தட்டவும் தமிம் பானு கதவை திறந்து இருக்கிறார்.

 போலீசார் வீட்டில் சென்று பார்த்த போது பாத்ரூமில் உடல் துண்டு துண்டாக்கப்பட்ட நிலையில் கவரில் கட்டப்பட்டிருந்திக்கிறது. அந்த உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.   இதன் பின்னர் தலை எங்கே என்று விசாரித்த போது,  தமீம் பானுவின் சகோதரர் வாசிம் பாஷா தான் இந்த கொலையை செய்ததும்,  டெல்லி பாபு தான் ஆட்டோவில் தலையை கொண்டு அடையாறு ஆற்றில் வீசிவிட்டு வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

 எதற்காக இந்த கொலை நடந்தது என்று போலீசாரின் விசாரணையில்,  கள்ளக்காதலால்  இந்த கொலை நடந்தது தெரிய வந்திருக்கிறது.   தமீம் பானு மணலி பகுதியில் இருந்தபோது  சக்கரபாணியிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருக்கிறார்.   அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தில் சக்கரபாணி தமிம் பானுவுடன் நெருங்கி பழகி இருக்கிறார்.  கள்ள உறவும் வைத்திருக்கிறார்.

ப்ப்

 தமிம் பானுவின் கணவர் தி. நகரில் பிளாட்பார கடை துணி வியாபாரம் செய்து வருகிறார்.   மனைவியின் கள்ள உறவு தெரிய வந்ததும் அவர் மணலியில் இருந்து ராயபுரம் பகுதிக்கு வீட்டை மாற்றிக் கொண்டு வந்திருக்கிறார்.   ஆனாலும் கள்ள உறவு மாறவே இல்லை .  ராயபுரத்திற்கும் சக்கரபாணி வந்து தமீம் பானுடன் உல்லாசம் அனுபவித்து சென்றிருக்கிறார்.

 சம்பவத்தன்று தமீன்பானுவுடன் சக்கரபாணி உல்லாசமாக இருந்தபோது,  தமிம் பானுவின் தம்பி வாசிம் பாஷா நேரில் பார்த்ததும் ஆத்திரப்பட்டிருக்கிறார் . உடனே சக்கரபாணியை அடித்து கொலை செய்திருக்கிறார்.   கொலையை மறைப்பதற்காக உடலை துண்டு துண்டாக வெட்டி பார்சல் செய்து இருக்கிறார். துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடலையும் தலை வீசப்பட்ட அடையாறு ஆற்றிலேயே  வீச முடிவு எடுத்திருந்த நிலையில் தான் போலீஸ் சிக்கி இருக்கிறார்கள்.

 தமிம் பானு, அவரது தம்பி வாசிம் பாஷா,  ஆட்டோ ஓட்டுநர் டெல்லி பாபு மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.  அடையாற்று ஆற்றில் வீசப்பட்ட சக்கரபாணியின் தலையை போலீசார் தேடி வருகின்றனர்.