சிறுமியை வெளியே மீட்டு வாலிபரை வீட்டுக்குள் பூட்டி வைத்த ஊர்மக்கள்

 
t

 பத்திரமாக பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு போன நண்பனின் 8 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தவனை வீட்டுக்குள் வைத்து பூட்டி வைத்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் அடுத்த பாகலூரில் தோட்ட வேலை செய்து வந்திருக்கிறார் சந்திரபலி(37) இவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்.  அதே மாநிலத்தைச் சேர்ந்த  ஒருவரும் அவருடன் வேலை செய்து வருகிறார்.  

op

 இருவரும் சேர்ந்து மது அருந்தி இருக்கிறார்கள்.  அதன் பின்னர் இருவரும் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.  அப்போது,   கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியை பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்ததால் சந்திரபலியிடம்,  தான் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு திரும்பி வரும் வரைக்கும் தனது 8 வயது மகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி இருக்கிறார்.

 சரி என்று சந்திரபலி நண்பனின் வீட்டில் தங்கியிருக்கிறார்.   மதுபோதையில் இருந்த சந்திரபலி,  நண்பனின் 8 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதில் அந்த சிறுமி அலறி துடித்திருக்கிறார் .  சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டு இருக்கிறார்கள்.   சந்திரபலியை வீட்டிற்குள்ளேயே வைத்து பூட்டி வைத்திருக்கிறார்கள். 

சிறுமியை  சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.   போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அவர்கள் விரைந்து வந்து வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சந்திரபலியை கைது செய்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.