பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற பெற்றோர்

 
k

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மகன் மதுவுக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்திருக்கிறார்.  அவரை 8 லட்சம் ரூபாய் செலவில் கூலிப்பட வைத்து பெற்றோரே கொலை செய்துள்ளனர். 

 தெலுங்கானா மாநிலத்தில் கம்பத் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் சிங்.  இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் . இவரின் மனைவி ராணி பாய் .  இத்தம்பதிக்கு சாய்ராம் என்ற மகன் உள்ளார்.   26 வயதான அந்த வாலிபர் வேலைக்கு செல்லாமல் மதுவுக்கு அடிமையாகி ஊரை சுற்றி வந்திருக்கிறார்.  மது குடிக்க பணம் கேட்டு பெற்றோரை அடித்து துன்புறுத்தியும் வந்திருக்கிறார் . 

ப்

இதனால் பொறுமை இழந்த பெற்றோர்,  இப்படி ஒரு மகன் தங்களுக்கு தேவையே இல்லை என்று முடிவுக்கு வந்திருக்கின்றனர்.  இதனால் தங்களால் மகனை கொல்வதற்கு மனம் இல்லாமல் கூலிப்படையை வைத்து கொலை செய்துள்ளனர்.

 கடந்த அக்டோபர் 18ஆம் தேதி அன்று சாய்ராம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  போலீசாரின் விசாரணையில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  போலீசாரின் தீவிர விசாரணையில் சாய்ராம் தனது பெற்றோரின் காரில் கடைசியாக பயணம் செய்தது தெரியவந்திருக்கிறது.   பெற்றோரின் கார்தான் இந்த கொலை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

 இதை எடுத்து போலீசார் சுலபத்தில் கொலையாளிகளை பிடித்து விட்டனர்.   அதன் பின்னர் கூலிப்படையினரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.   பெற்ற மகனை கொலை செய்வதற்காக கூலிப்படைக்கு 8 லட்சம் ரூபாய் கொடுத்து விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.