வலி இல்லாத மரணம்... ஹீலியம் வாயுவை சுவாசித்த ஐ.டி.நிறுவன பெண்

 
ஹெ

தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர் அந்த மரணம் வழியில்லாத மரணமாக அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான முயற்சியில் இறங்கி ஆன்லைன் மூலம் வாங்கிய ஹீலியம் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் ஐடி நிறுவன பெண் இந்து.

ஈரோடு மாவட்டத்தில் கோபியை அருகே புலவ காளிபாளையம் தோட்டக்காட்டூரை சேர்ந்தவர் இந்து(25).  பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான இவருக்கும் கோபி அடுத்த நலகண்டன் பாளையம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு பாரதி(30) என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்திருக்கிறது.   திருமணத்திற்கு பின்னர் கணவன் -மனைவி இருவருமே சென்னையில் தங்கி இருந்து ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.

ஹ்

 இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பாக தோட்டக்காட்டூரில் இருக்கும் இந்துவின் பாட்டி,  வீட்டில்  கீழே விழுந்து படுகாயம் அடைந்திருக்கிறார்.  இதை எஅத்து பாட்டியை பார்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோபி சென்று இருக்கிறார் இந்து.

 நேற்று காலை வீட்டில் உள்ள அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டு கொண்ட இந்து,  இரவு வரைக்கும் வெளியே வரவில்லை .  இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே பார்த்தபோது அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் .  முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றி டேப் வைத்து ஒட்டி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது.  

ஹெ

இதன் பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து இந்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .  இந்துவின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர்.   அதில் வலியில்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்காக ஹீலியம் வாய்வு அடங்கிய சிலிண்டரை ஆன்லைனில் மூலம் வாங்கியது தெரியவந்திருக்கிறது.   

ஹீலியம் வாயுவை பிளாஸ்டிக் கவரில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டது  தெரிய வந்திருக்கிறது.

 திருமணம் நடந்து நான்கு மாதங்களுக்குள் இந்து ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து கோபி கோட்டாட்சியர் விசாரணை நடத்திய வருகின்றார்.  இன்னொரு பக்கம் போலீஸ் டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகின்றார்.