ஒருதலைக்காதல்- சிறுமியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞர்

 
g

 ஒரு தலைக் காதல் விவகாரத்தால் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி இருக்கிறார் 15 வயது சிறுமி.   உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் பதோகி என்கிற பகுதியில் 15 வயது சிறுமியை 22 வயது இளைஞர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருக்கிறார்.   நேற்று மாலை தனது சகோதரியுடன் நிஷா பயிற்சி நிறுவனத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார்.   அப்போது பைக்கில் வந்த இளைஞர் அரவிந்த் விஸ்வகர்மா அந்த சிறுமியின் தலையில் துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி இருக்கிறார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார் அந்த சிறுமி அப்பகுதியினர் இதை பார்த்துவிட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

d

 போலீசார் விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.  இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பியவர்களுடைய இளைஞரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த இளைஞர் அந்த சிறுமியை நீண்ட நாட்களாக ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார்.   கடைசி வரைக்கும் அந்த சிறுமி அந்த இளைஞரை பிடிக்கவில்லை , காதலிக்க முடியாது,  என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறிக் கொண்டே வந்திருக்கிறார்.  இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனக்கு கிடைக்காத அந்த பெண் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று அந்த சிறுமியை சுட்டு கொலை செய்திருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.