நடிகையின் நிர்வாண வீடியோக்கள்..தயாரிப்பாளரின் வலையில் சிக்கிய மேலும் பல நடிகைகள்

 
vb

 நடிகையை 45 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்த பிரபல நடிகர்,  அந்த நடிகையின் நிர்வாண வீடியோக்களை பதிவு செய்து கொலை மிரட்டலும் விடுத்து வந்திருக்கிறார்.  போலீஸ் கைதுக்கு பயந்து தற்போது அவர் தலைமறைவாகி இருக்கிறார் .

பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமானவர் விஜய்பாபு.   இவர் மீது நடிகை ஒருவர்  பாலியல் புகார் கூறியிருந்தார்.  இதுதொடர்பாக விஜய்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

vbb

 தயாரிப்பாளரும் நடிகருமான விஜய் பாபு மீது கடந்த 22ஆம் தேதியன்று முகநூல் பதிவு வாயிலாக நடிகை பாலியல் புகார் அளித்திருக்கிறார்.  விஜய்பாபு தயாரித்த சில படங்களிலும் நடித்திருக்கிறார்.  அந்த வகையில் அந்த நடிகையுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு தனிப்பட்ட முறையிலும் நடிகைக்கு விஜய்பாபு சில உதவிகளை செய்து வந்துள்ளார்.

 இதையடுத்து அந்த நடிகையை காதலிப்பதாக கூறியிருக்கிறார்.   இதை சொல்லியே அந்த நடிகையுடன் 45 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார். பின்னர் அந்த நடிகையின் நிர்வாண வீடியோக்களை பதிவு செய்து மிரட்டி வந்திருக்கிறார் விஜய் பாபு.   தன்னைப்போல நடிகர் விஜய் பாபுவிடம் மேலும் பல பெண்கள் சிக்கி இருப்பதாகவும் அந்த நடிகை தெரிவித்திருக்கிறார்.

 இதை அடுத்து சமூக வலைத்தளத்தில் நடிகையின் குற்றச்சாட்டுக்கு விஜய்பாபு பதிலளித்திருக்கிறார்.   அதில் நடிகையின் பெயரை குறிப்பிட்டு அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்திருக்கிறார்.

 இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டதற்காக விஜய் பாபு மீது ஒரு வழக்கு பதிவாகி இருக்கிறது.  போலீசின் கைதுக்கு பயந்து அவர் தலைமறைவாக இருக்கிறார்.   ஆனால் விரைவில் அவரை கைது செய்து விடுவோம் என்று தெரிவித்துள்ளனர் போலீசார்.