ஒன்பதாம் வகுப்பு சிறுமிக்கு தொடர் வாந்தி, மயக்கம் - மருத்துவர்கள் சொன்னதை கேட்டு அதிர்ந்த தாய்

 
sss

ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ  சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரி தனது குடும்பத்துடன் கடந்த 11 மாதங்களுக்கு கோவையில் குடியேறி இருக்கிறார்.  அங்கே மளிகை கடை நடத்தி வந்திருக்கிறார்.  இவரது மகள் அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார் . சிறுமியின் 26 வயது உறவினர் இவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.  

j

 சிறுமி வீட்டில் தொடர்ந்து வாந்தி எடுத்து சோர்வாக காணப்பட்டிருக்கிறார்.  அதனால் சிறுமியை அழைத்துக் கொண்டு  கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் தாயார்.  அங்கு மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்துள்ளனர்.  

 பரிசோதனைக்கு பின்னர் சிறுமி ஐந்து மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் சொன்னதை கேட்டு தாயார் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்.  பின்னர்  மருத்துவர்கள் சொன்ன அறிவுறுத்தலின் பேரில் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் அந்த தாயார் .  அதன் பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். 

 விசாரணையில் சிறுமியின் உறவினர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்னிடம் ஆசை வார்த்தைகள் சொல்லி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததை சொல்லி இருக்கிறார் .    சிறுவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தொண்டாமுத்தூர் போலீசார் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.  அந்த இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார்கள் தொண்டாமுத்தூர் போலீசார்.