ஒன்பது வயது மகளுக்கு பாலியல் தொல்லை- தந்தை சிறையிலடைப்பு

 
ch

 ஒன்பது வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 திருச்சி மாவட்டத்தில் லால்குடி.   இப்பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு செல்வதையே வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.  வீட்டில் மனைவியுடன் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். 

rr

 இந்த நிலையில் இவருக்கு ஒரு மகனும் 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.  தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் இந்த 36 வயதான கூலி தொழிலாளி,  வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஒன்பது வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார்.

 இதைக்கண்டு அதிர்ந்து போன தாய்,   கணவர் மீது லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் .  புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாலதி,  கூலித் தொழிலாளி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.  பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்துள்ளனர்.