புதிதாக திறக்கப்பட்ட தனியார் மருத்துவமனை - செவிலியருக்கு நேர்ந்த கொடூரம்

 
u

 புதிதாக திறக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே இளம் செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஜோடிக்கப்பட்டு மருத்துவமனையில் சுவற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கிறார்.   இந்த கொடூரம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னாவ் மாவட்டத்தில் அரங்கேறியிருக்கிறது.

உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியருக்கு 18 வயது.   இவர் பங்கார்மு என்றவரிடம் ஊரில் புதிதாக திறக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியில் சேர்ந்து இருக்கிறார்.  ஏப்ரல் 29 ஆம் தேதியான நேற்று முதல்நாள் பணிக்கு சென்ற அவர் மாலையில் வீடு திரும்பியிருக்கிறார் . 

u

இரவு 10 மணி அளவில் திடீரென்று அவருக்கு போன் வந்திருக்கிறது.  அவசர சிகிச்சை அதனால் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று அழைத்திருக்கிறார்கள்.   வேலைக்கு சேர்ந்த முதல் நாளே இப்படி அழைப்பு வரவும் அதை மறுக்க முடியாமல் உடனே மருத்துவமனைக்கு விரைந்து இருக்கிறார் அந்த இளம் செவிலியர்.

 அதன்பின்னர் அந்த செவிலியர் வீடு திரும்பவில்லை.   மறுநாள் காலையில் 11 மணிக்கு நேற்றைய தினம் மருத்துவமனையின் வெளிப்புறச் சுவரில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் உடல் காணப்பட்டதாக தகவல் வர,  உறவினர்கள் பதறியடித்துக்கொண்டு ஓட , போலீசார் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர் . அவர்கள் அந்த செவிலியரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு கொலையா? தற்கொலையா? என்பறித்து  குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 செவிலியரின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மருத்துவ மனையின் உரிமையாளர் அணில் குமார் உள்பட 3 பேர் மீது பாலியல் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியிருக்கின்றனர்.   ஆனால் போலீசார் இதுவரையிலும் செவிலியர் மரணம் தொடர்பாக யாரையும்  கைது செய்யவில்லை.