முன்னாள் காதலியுடன் ஊர்சுற்றிய வாலிபர் மீது கொலைவெறி தாக்குதல் -3 பேர் கைது

 
m

தனது முன்னாள் காதலியுடன் திரிந்த வாலிபர் மீது ஆத்திரமடைந்து நண்பர்களுடன் சேர்ந்து தீவரி தாக்குதல் நடத்தி இருக்கிறார் வாலிபர் இதனால் அவர் உட்பட அவரின் நண்பர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவில் சிவாஜி நகர் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் பவன் என்கிற வாலிபரை காதலித்து வந்திருக்கிறார்.  ஆனால் பவன் இளம் பெண்ணிடம் சரியாக பேசாமல் இருந்திருக்கிறார்.  இதனால் பவனை விட்டு பிரிந்து இருக்கிறார் அந்த இளம்பெண்.  

 அதன் பின் அந்தோணி என்பவரை இரண்டாவதாக காதலித்து வந்திருக்கிறார்.  இது பவனுக்கு தெரிய வந்ததும் ஆத்திரம் ஏற்பட்டிருக்கிறது.  பின்னர் தனது காதலியுடன் சென்று பேசி பார்த்தும் காதலி பேச மறுத்து இருக்கிறார்.   இனிமேல் தன்னிடம் பேச வேண்டாம் என்றும் சொல்லி தொடர்பை துண்டித்து கொண்டிருக்கிறார்.

kn

 இந்த நிலையில் அந்தோணியும் அந்த இளம் பெண்ணும் குயின்ஸ் சாலையில் இருக்கும் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே பைக்கில் சென்று இருக்கிறார்கள்.  இதை பார்த்த அப்பெண்ணின் முன்னாள் காதலனுக்கு ஆத்திரம் தலைக்கு ஏறி இருக்கிறது.   உடனே தன் நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து அந்தோணியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.  

 அதன்படி அந்தோணியை பைக்கில்  துரத்திச் சென்று வழிமறித்து இருக்கிறார்கள்.  பைக்கை நிறுத்தியதும் அந்தோணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.   அப்போது வாக்குவாதம் முற்றிய போது பவன் அவர் நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து அந்தோணியை கடுமையாக தாக்கி இருக்கிறார்கள்.  அந்த நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்தோணியை கொலை செய்ய முயற்சித்திருக்கிறார் பவன்.

 அந்த சமயத்தில் அங்கு நின்றவர்கள் ஓடிவந்து சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.   தாக்குதலின் போது அந்த இளம் பெண் பவன், அவரது நண்பர்கள் காலில் விழுந்து அந்தோணியை விட்டு விடும்படி கதறி இருக்கிறார்.  இதன் பின்னர் அந்த இளம் பெண் விதான சவுதா காவல் நிலையத்திற்கு சென்று பவன் அவரது நண்பர்கள் மீது புகார் அளித்துள்ளார்.

 புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.  வாலிபர்கள் தாக்கிய சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கடைகளில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதில் பவன் அவரது நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து அந்தோணியை தாக்கி கொலை செய்ய முற்பட்டது தெரிய வந்திருக்கிறது.  இதை அடுத்து பவன் அவரது நண்பர்கள் சரத், கார்த்தி மீது கொலை வெறி தாக்குதல் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.