மூன்று குழந்தைகளை ஆற்றில் வீசி கொன்ற தாய்! கணவன் மீதான ஆத்திரத்தில் நடந்த கொடூரம்

 
ர்

மூன்று குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்  மீட்கப்பட்டுள்ளார்.  குடும்பத்தகராறில் கணவன் மீதான ஆத்திரத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது.  சதா குப்பம் பகுதியில் இச்சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது .

திருவண்ணாமலை மாவட்டத்தில் சதா குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன்.  இவரின் மனைவி அமுதா .  இத்தம்பதிக்கு இளவரசன், குறளரசன் என்கிற இரண்டு ஆண் குழந்தைகளும்,  யாஷினி என்ற பெண் குழந்தையும் இருந்தன. 

அம்

  கணவன் பரசுராமனுக்கும் மனைவி அமுதாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்த தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.  இந்த தகராறு அதிகமாகவே கணவன்மீது ஆத்திரமடைந்த மனைவி அமுதா,   தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தென்பெண்ணை ஆற்றங்கரைக்குச் சென்று இருக்கிறார். அங்கே கரையில் நின்று கொண்டு மூன்று குழந்தைகளையும் ஆற்றில் வீசி இருக்கிறார். 

 பின்னர் தானும் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.   இதை தூரத்தில் இருந்து கவனித்துவிட்ட உறவினர்கள் ஓடி வந்து தற்கொலைக்கு முயன்ற அமுதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.  

 தென்பெண்ணை ஆற்றில் வீசப்பட்ட மூன்று குழந்தைகளையும் மீட்க போராடியதில் மூன்று குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் சடலமாகவே மீட்கப்பட்டுள்ளனர்.  மூன்று குழந்தைகளின் உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் .

 சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.  இது குறித்து வழக்கு பதிவு செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமுதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத்த தகராறு காரணமாக மூன்று குழந்தைகளை ஆற்றில் வீசி கொன்ற பயங்கரம் சதா குப்பம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.