மகளை இரண்டாவது கணவருக்கு விருந்து வைத்த தாய் சிறையிலடைப்பு

 
த்

மகளை தனது காதலன் இழுத்துச்செல்வதை பார்த்தும் கண்டும் காணாதது போல் இருந்த தாய் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது காதலனும் சிறையில் அடைக்கப்பட்டார். 

 திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் அடுத்த கிராமத்தில் வசித்து வருபவர் மகேஸ்வரி.   மகேஸ்வரியின் முதல் கணவர் கோபாலகிருஷ்ணன் காலம் சென்று சில வருடங்கள் ஆகிவிட்டன.   இதையடுத்து இரண்டாவதாக ராஜா என்பவருடன் தற்போது வசித்து வருகிறார். 

 மகேஸ்வரிக்கு முதல் கணவருக்கு பிறந்த 15 வயது மகள் இருக்கிறார்.  மகளை தன்னுடனேயே வளர்த்து வருகிறார்.  மகேஸ்வரி பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.   அவரது மகள் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். 

ட்ஜ்

 மகேஸ்வரி இரண்டாவது கணவர் ராஜா கட்டிட மேஸ்திரி.  இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் .  மூன்று பேரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில்,   கடந்த சில நாட்களாகவே மகேஸ்வரியின் மகளை மிரட்டி அடிக்கடி ராஜா பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.   இதற்கு தாய் மகேஸ்வரி கண்டும் காணாததுபோல் சென்றிருக்கிறார்.  

 இதுபற்றி வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார் ராஜா.  தாயின் இரண்டாவது கணவர் தன்னிடம் தவறாக நடக்க அதை கண்டும் காணாதது போல் இருக்கிறாரே தாய் என்று நினைத்து மனம் வருந்தி, உறவினர்களிடம் சென்று தனது நிலையை சொல்லியிருக்கிறார்.   இதில் ஆத்திரமடைந்த அவர்கள் பல்லடம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியை அழைத்துச் சென்று புகார் கொடுத்துள்ளனர் .

போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .  இதையடுத்து சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த சிறுமியின்  இரண்டாவது கணவர் ராஜா,  சிறுமியின் தாய் மகேஸ்வரி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பெற்ற மகளை இரண்டாவது கணவர் பாலியல் தொந்தரவு செய்து வந்ததை கண்டும் காணாததுபோல் அதற்கு உடந்தையாக இருந்ததால் அவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.