குட்டைப்பாவாடை பெண்களை குறிவைத்து.. 3200க்கும் மேற்பட்ட வீடியோக்கள்

 
sh

குட்டைப்பாவாடை பெண்களை குறி வைத்து 3200 க்கும் மேற்பட்ட வீடியோக்களை எடுத்து இருக்கிறார் டாக்டர் ஜூ பென் வி.   ஷூவில்  ரகசிய கேமராவை பொருத்திக்கொண்டு குட்டை பாவாடை பெண்களின் அந்தரங்க பகுதியை வீடியோவாக எடுத்திருக்கிறார்.  விவாகாரம் தெரியவந்ததும் அந்த டாக்டரின் மருத்துவ  லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூரைச் சேர்ந்த டாக்டர் ஜூ பென் வி.   இவர் தனது ஷூ வில் ரகசிய கேமராவை பொருத்திக்கொண்டு கல்லூரி பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் சுற்றி வந்துள்ளார்.   ஷூவில் கேமரா இருப்பதால் குட்டை பாவாடை பெண்களின் அந்தரங்கப் பகுதியை தொடர்ந்து வீடியோ எடுத்து வந்திருக்கிறார்.  இதுவரைக்கும் 3200-க்கும் மேற்பட்ட வீடியோக்களை எடுத்துள்ளார்.  

vi

 இந்த குற்றச்சாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு அந்த டாக்டர் போலீஸ் இடம் சிக்கி இருக்கிறார்.   மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.   இந்த நிலையில் அவரது பெயர் மருத்துவ பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் மருத்துவ கவுன்சிலுக்கான ஒழுங்குமுறை தீர்ப்பாயம் தெரிவித்திருக்கிறது . இது குறித்து சிங்கப்பூர் மருத்துவ கவுன்சிலுக்கான ஒழுங்குமுறை தீர்ப்பாயம்,   பல சந்தர்ப்பங்களில் இது மாதிரியான குற்றச்செயல்களில் ஈடுபட்ட மருத்துவர் ஒருவரை தொடர்ந்து தொழில் ரீதியாக அனுபவிப்பது மக்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை உண்டாக்கிவிடும்.   அதனால் அவரது மருத்துவ லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 கல்லூரிகள் , மால்கள் போன்ற இடங்களில் அதிக வீடியோக்களை ரெக்கார்ட் செய்து இருக்கிறார்.  மால்கள்.. இங்கு மட்டும் அதிக வீடியோக்கள் எடுத்துள்ளார்.  பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார்.   பள்ளி விழாக்களில் மாணவர் போல் சீருடை அணிந்து கொண்டும் 97 வீடியோக்களை எடுத்து இருக்கிறார்.    2018 ஆம் ஆண்டு இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.  ஆனால் அப்போது அவர் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.