அடகு வைத்த ரேஷன் கார்டை கேட்க சென்ற இளைஞர் படுகொலை

 
murder

நீடாமங்கலம்  அருகே அடகு வைத்த ரேஷன் கார்டை கேட்க சென்ற இளைஞரை அரிவாளால் வெட்டி படுகொலை  செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படப்பையில் இரண்டு ரவுடிகள் வெட்டிக்கொலை !

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்  அருகே  வையகளக்தூர் தெற்குத்தெருவை சேர்ந்தவர்  ஜெய்சங்கர் (29) அதே தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28) இவர்கள் இருவரும் நண்பர்கள் .இருவரும்  மதியம் பேசிக்கொண்டிருந்த போது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது  .இதில்  ஆத்திரமடைந்த மணிகண்டன் மறைத்து வைத்திருந்த  அரிவாளால் ஜெய்சங்கரை சராமாரியாக தலை மற்றும் கையில்  வெட்டியுள்ளார்  இதில் ரத்தம் காயங்களுடன் ஜெய்சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .இதனையடுத்து மணிகண்டன்  அங்கிருந்து தப்பியோடினார். இது குறித்து அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக நீடாமங்கமலம் காவல்துறையினர்க்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலறிந்த நீடாமங்கமல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெய்சங்கர் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக   மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.  

உயிரிழந்த  ஜெய்சங்கருக்கு திவ்யா என்ற கர்ப்பிணி மனைவி பிரசவத்திற்காக தனது சொந்த ஊரான திட்டச்சேரியில் உள்ளார். காவல்துறையினர் நடத்திய  விசாரணையில்  மணிகண்டன்  கஞ்சா மற்றும் மதுபோதையில்  இருந்துள்ளதாகவும்  அப்போது ஜெய்சங்கர்  தனது வீட்டின் ரேஷன் கார்டை மணிகண்டன் வீட்டில் அடகு வைத்திருந்தாகவும்  .அதனை மணிகண்டன் வீட்டிற்கு சென்று  ஜெய்சங்கர் கேட்டதாகவும் அது தொடர்பாக இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டதால் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளததாகவும் மணிகண்டன் தொடர்ந்து கஞ்சா குடித்துவிட்டு அந்த பகுதியில் உள்ளவர்களை மிரட்டி வருவதாகவும்  கூறப்படுகிறது .  திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் முழுவதும் கஞ்சா விற்பனை தீவிரமாக நடைபெறுவதால்  கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்    சம்பவம் குறித்து நீடாமங்கலம்  காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மணிகண்டனை வலைவீசி தேடி வருகின்றனர்.