மாமியாருடன் திருமணம்! தனிக்குடித்தன தகராறில் கொன்று சாக்குமூட்டையில் கட்டிய மருமகன்

 
மொ

மாமியாருக்கும் மருமகனுக்கும் ஏற்பட்ட கள்ள உறவில் இருவரும் ஊரைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மாமியாரை கொடூரமாக கொலை செய்து சாக்கு முட்டையில் கட்டி வைத்துவிட்டு தலைமறைவாக இருக்கிறார் மருமகன்.   ஜார்கண்ட் மாநிலத்தில்  நடந்திருக்கிறது இந்த சம்பவம் .

பீகார் மாநிலத்தில் பாங்கா மாவட்டம்.   இம்மாவட்டத்தை சேர்ந்த ஆசிஸ் ரஞ்சனுக்கு மாமியார் பூஜா சிங் உடன்  கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது.  உறவினர்களுக்கு தெரியாமல் மறைந்த மறைந்து உல்லாசம் அனுபவித்து வந்த அவர்கள் நிரந்தரமாக நிம்மதியாக வாழ வேண்டும் என்று முடிவெடுத்து வீட்டை விட்டு ஊரை விட்டு வெளியேறி சென்று ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்றிருக்கிறார்கள்.  அங்கே திருமணம் செய்து கொண்டு பின்னர் கிரேட்ட்ரா நொய்டாவுக்கு சென்று அங்கு செக்டார் காமாவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறார்கள்.

க்

 இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது.   அப்போது மாமியார் பூஜாவை கொடூரமாக கொலை செய்த ஆசிஸ்,  மாமியார் உடலை  ஒரு சாக்கு மூட்டையில் கட்டி வைத்துவிட்டு தலைமறைவாகி இருக்கிறார்.    வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அடுத்து வீட்டின் உரிமையாளர் போலீசுக்கு தகவல் சொல்ல போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாக்கு முட்டையில் அழுகிய நிலையில் கிடந்த பூஜாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

 இது குறித்து விசாரணையில் ஆசிஸ் தலைமறைவாக இருப்பதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.   அவர் எதற்காக மாமியார் பூஜாவை கொலை செய்தார் என்ற விசாரணை நடந்து வருகிறது . வீட்டின் உரிமையாளரிடம் இருந்து விசாரணையில் ஆசிஸ்க்கு புதிய வேலை கிடைத்து இருப்பதாக  பூஜா தன்னிடம் கூறிக் கொண்டிருந்தார். இதனால் பத்தாம் தேதி வீட்டை காலி செய்ய போவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார் . அதற்குள் இந்த படுகொலை நடந்திருக்கிறது .   பூஜாவை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி இருக்கிறார் .  ஏன் கொலை செய்தார் என்பது தெரியவில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.