மகளை கழுத்தை நெரித்து ஆணவக்கொலை - எலும்புக்கூடுகள் மீட்பு

 
க்

வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை தனது மகள் காதலித்தார் என்பதற்காக அவரை கழுத்தை நெறித்து ஆணவக் கொலை செய்து புதைத்துள்ளார்.  போலீசார் விசாரணை நடத்தி எலும்புக்கூடுகளை மீட்டு தடயவியல்  பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் அல்மோரா மாவட்டத்தில் ஆதிக்க சாதி பெண்ணை திருமணம் செய்து விட்டார் என்பதற்காக பட்டியல் இன இளைஞர் ஒருவர் பெண்ணின் உறவினர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.   இந்த நிலையில் வேறு சாதி இளைஞரை காதலித்தார் என்பதற்காக பெற்ற மகளையே கழுத்தை நெரித்துக் கொன்று புதைத்திருக்கிறார் தந்தை.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம் .

ம்ன்ன்

ஜின்ஜானா பகுதிக்கு உட் பட்ட ஷியாம்லி ஷியாம்லா வல்லேஜில்  கடந்த 9ஆம் தேதி அன்று இந்த சம்பவம் நடந்திருக்கிறது.  20 வயது அந்த இளம் பெண்  ஹிமானியின் காதலுக்கு தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.  

 பிரேமாத்குமார் மகள் ஹிமானி என்ற பெண் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்திருக்கிறார்.  இது தந்தை பிரமோத் குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.   அந்த சமூகத்து இளைஞரை காதலிக்க கூடாது என்று கடுமையாக எச்சரித்திருக்கிறார்.   ஆனால் மகள் ஹிமானி அந்த இளைஞரை தான் காதலிப்பேன் . அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறார்.

இந்த நிலையில்  காதலன் அஜய் காஷ்யப்புடன் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார்.   சில நாட்களுக்கு பின்பு வீடு திரும்பி இருக்கிறார்.  அப்போது தனது மகளை சமாதானப்படுத்தி பார்த்து இருக்கிறார் பிரமோத் குமார்.   அப்போதும் ஹிமானி தனது காதலில் பிடிவாதமாக இருந்ததால் அவரின் கழுத்தை நெரித்து கொன்று புதைத்து இருக்கிறார் . 

சந்தேகத்தின் பேரில் போலீசார் பிரமோத்குமாரிடம் விசாரிக்க அவர் உண்மையை ஒப்புக்கொண்டதை  அடுத்து அவர் அடையாளம் காட்டிய இடத்தில் சென்று பார்த்த போது அங்கிருந்து எலும்புக்கூடுகளை மீட்க போலீசார் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.