"எட்டு வருஷமா என் தம்பியை வச்சிருக்கியா ?"-கர்ப்பிணி மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி

 
hus wife


கர்ப்பிணி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கொன்ற கணவரை போலீஸ் கைது செய்தது 

crime
உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில்,  மீரட்டின் கார்கோடா பகுதியில்
முரளி என்ற வினோத் மொஹல்லா திஹாயில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வினோத் ஹாபூரில் உள்ள தௌலானாவில் வசிக்கும் பூனம் என்பவரை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பின்னர், தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.
இருப்பினும், வினோத் திருமணமான நாள் முதல்  பூனத்தின் நடத்தையில் மீது சந்தேகம் கொண்டிருந்தார். மேலும் அவருக்கு தன்னுடைய தம்பியோடு கள்ள உறவு கொண்டிருப்பதாக சந்தேகப்பட்டு அவரிடம் அடிக்கடி  சண்டை போட்டு வந்தார் .இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை காலை வினோத் தனது கர்ப்பிணி மனைவியோடு தூங்கி கொண்டிருந்தார் .பின்னர் வினோத் திடீரென மனைவியை  எழுப்பி, கூரிய ஆயுதத்தால் பலமுறை அவரை தாக்கினார்.அவரின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் ஓடி வந்து பார்த்த போது  அந்த கர்ப்பிணி மனைவி இறந்து கிடந்தார் .பின்னர் அவர்கள் போலீசில் தகவல் கூறியதும் போலீசார் விசாரணை நடத்தி அந்த கணவர் வினோத்தை கொலை வழக்கில் கைது செய்தனர்