காதலியின் பக்கத்து வீட்டு சிறுமி மீதும் மோகம்! கட்டிவைத்து தர்ம அடி

 
m

மனைவியை விட்டு பிரிந்து சென்று கள்ளக்காதலியுடன் குடித்தனம் நடத்தி வந்த வாலிபர் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது பிடித்து கட்டிவைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து இருக்கிறார்கள்.

 கர்நாடக மாநிலத்தில் மைசூர் மாவட்டம் திப்பூர் கிராமம்.   இக்கிராமத்தில் 12 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார் .  பக்கத்து கிராமத்தை சேர்ந்த காளநாயகா(46) என்கிற தொழிலாளி,   திருமணம் முடிந்து மனைவி பிள்ளைகளுடன் வசித்து வந்தவருக்கு திப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுடன் கள்ள உறவு ஏற்பட்டு இருக்கிறது.

y

 இதை தெரிந்துகொண்ட மனைவி போலீசில் புகார் அளித்திருக்கிறார்.   அதுமட்டுமல்லாமல் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் கூறியிருந்தார்.   இதனால் காளநாயகாவை  கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அந்த வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

 சிறையில் அடைக்கப்பட்டிருந்த காளநாயகா இரண்டு ஆண்டுகள் தண்டனை அனுபவித்துவிட்டு அண்மையில்தான் விடுதலையாகி இருக்கிறார்.   அவர் மனைவியுடன் சேர்ந்து வாழாமல் திப்பூர்  கிராமத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுடன் கள்ள உறவை தொடர்ந்திருக்கிறார்.

 இந்தநிலையில் கள்ளக்காதலி வீட்டிற்குச் சென்று வந்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த 12 வயது சிறுமி மீதும் மோகம் கொண்டிருக்கிறார்.   அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் சொல்லி பேசி, அச்சிறுமி விரும்பிய திண்பண்டத்தை வாங்கித் தருவதாக சொல்லி அழைத்துச் சென்றிருக்கிறார். ஆள்  நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றதும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்திருக்கிறார்.

அப்போத் சிறுமி அலறல் சத்தம் போட்டிருக்கிறார்.  சத்தம் கேட்டு பகுதிமக்கள் ஓடி வந்திருக்கிறார்கள்.  இதைக் கண்ட காளநாயகா தப்பிக்க பார்த்திருக்கிறார்.  ஆனால் இளைஞர்கள் ஓடிச் சென்று  அவரை பிடித்து விட்டனர்.  மின்கம்பத்தில் அவரை கட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து இருக்கிறார்கள் .

தகவலறிந்த போலீசார் வந்து காளநாயகாவை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.