காதலிகளை கொன்று மரத்தில் தொங்கவிட்ட காதலன்கள்

 
la

 தலித் சகோதர சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு ஒரே மரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தனர்.  இந்த படுகொலைகள் வழக்கில் ஆறு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.  அந்த சகோதரிகளின் காதலன்கள்தான் அந்த சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பூனம் என்கிற 15 வயது சிறுமியும்,   மனிஷா என்கிற 17 வயது சிறுமியும் ஒரே மரத்தில் தூக்கில்  தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.   இந்த சிறுமிகளின் தாயார் மாயா தேவி பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த  இளைஞர்கள் தான் தனது மகள்களை கடத்திச் சென்று அவர்களை கொன்று மரத்தில் தொங்க விட்டுள்ளார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

ke

சம்பவம் குறித்து உத்தரப்பிரதேச மாநில ஏடிஜிபி பிரசாந்த் குமார்,    சம்பவம் குறித்து ஆதாரங்களை சேகரிக்க போலீசார் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருக்கிறது.     வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள மரத்தில் இரண்டு சகோதரிகளின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி  வைக்கப்பட்டிருக்கின்றன.  பிரேத பரிசோதனை நடந்து வருகிறது.  சிறுமிகளில் குடும்பத்தார் அளித்த புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும்.  மேற்கொண்டு சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உத்தரவு தந்தார் .  

சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் உறவினர்களும் ஊர் மக்களும் திரண்டு வந்து போராட்டம் நடத்தி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  

இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து  அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.  சமாஜ்வாதியை கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்,   திரினாமுல் காங்கிரஸ் கட்சி,     காங்கிரஸ் நிர்வாகி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

re

விவகாரம் பெரிதானதை அடுத்து போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகள் 6 பேரை கைது செய்துள்ளனர்.   இதுகுறித்து, போலீஸ் எஸ். பி. சஞ்சீவ் சுமன்,  ’’தலித் சகோதரிகள் இருவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜூனைத், சோஹைல் என்கிற இளைஞர்களை காதலித்து வந்திருக்கிறார்கள்.  அந்த காதலர்களின் தூண்டுதலின்படி சிறுமிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி அந்த காதலன்களுடன் சென்று இருக்கிறார்கள்.

 அந்த இளைஞர்கள் திட்டமிட்டு சிறுமிகள் இருவரையும் பாலியல்  பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.  பின்னர் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறார்கள்.   அதன் பின்னர் தங்களது நண்பர்களை வரவழைத்து அவர்களின் உதவியுடன் அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் இருக்கும் மரத்தில் தற்கொலை செய்து கொண்டது போல தூக்கில் தொங்க விட்டு உள்ளார்கள்.   இதை அடுத்து அந்த சிறுமிகளின் காதலன்கள் ஜூனைத், சோஹைல்  மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த நான்கு பேர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இவர்கள் மீது கொலை மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.