காதலன் வெறிச்செயல்! கல்லூரி மாணவி முகத்தில் கத்திக்குத்து

 
k

பெற்றோர் கண்டித்ததால் காதலை கைவிட்ட காதலியின் மீது உள்ள ஆத்திரத்தில் முகத்தில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியிருக்கிறார் காதலன்.  போலீஸ் தேடி வந்த நிலையில் சரணடைந்த வரை சிறையில் அடைத்துள்ளனர்.

 சென்னையில் மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்,  தேனாம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.  இவர் பள்ளியில் படிக்கும் போது ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்ற இளைஞரை காதலித்து வந்திருக்கிறார்.   இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததை அடுத்து கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள் .  

kk

இதனால் அந்த மாணவி கடந்த இரண்டு மாதங்களாக பிரசாந்திடம் பேசுவதை தவிர்த்து இருக்கிறார்.   நம் காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை.  அதனால் இனி மேல்  என்னை சந்திக்க வேண்டாம்.  என்னிடம் பேச வேண்டாம் என்னை விட்டு விலகிச் சென்று விடு, இனிமேல் உனக்கு எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லி இருக்கிறார் அந்த மாணவி.   ஆனாலும் விடாமல் காதலியுடன் பேச முயற்சித்து வந்திருக்கிறார் பிரசாந்த் .

அந்த மாணவி பிடிவாதமாக பெற்றோர் சொல்லும் பேச்சைத் தான் கேட்பேன்  என்று பேச மறுத்து வந்திருக்கிறார்.  இதனால் ஆத்திரம் கொண்ட பிரசாந்த் காதலியை பழி தீர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார்.  அதன்படி கல்லூரி முடிந்து பேருந்துக்காக காத்திருந்த மாணவியிடம் சென்று எதற்காக என்னிடம் பேச மறுக்கிறாய் என்று கேட்டு வாக்குவாதம் செய்திருக்கிறார்.

 எனக்கு பெற்றோர் தான் முக்கியம் என்று மாணவி உறுதியாக சொல்ல,  ஆத்திரப்பட்ட பிரசாந்த் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் முகத்தில் குத்தியதில் மாணவி அலறி துடிக்கவும் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார் .  அங்கிருந்தவர்கள்  மாணவியை மாணவியை  மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

 சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை தேடி வந்துள்ளனர்.  இது தெரிந்து பிரசாந்த் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்திருக்கிறார்.  அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆதர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.