திருமணமான 26 நாளில் காதல் தம்பதி வெட்டிக்கொலை

 
ma

திருமணமான 26 நாளில் காதல் தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.   இந்த இரட்டை கொலையில் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

 தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் அடுத்த வீரப்பட்டி.   இக்கிராமத்தைச் சேர்ந்த 50 வயது விவசாயி முத்து குட்டி.   சொந்தமாக வேன்,  லாரி வைத்துக்கொண்டு வாடகைக்கு  விடும் தொழில் செய்து வந்திருக்கிறார்.    இவரது 20 வயது மகள் ரேஷ்மா கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். 

 முத்து குட்டியின் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசித்து வந்தவர் வடிவேல்.   அவரது மகன் மாணிக்கராஜ்( வயது26).   கூலித்தொழிலாளியான மாணிக்கராஜுக்கும் ரேஷ்மாவுக்கும் காதல் ஏற்பட்டு இருக்கிறது.   இவர்களின் காதல் விவகாரம் முத்துக்குட்டிக்கு தெரிய வர கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.   உறவினர்கள் தான் என்றாலும் பணம் சம்பந்தப்பட்ட அந்தஸ்தின் காரணமாக முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.  

re

 மாணிக்கராஜ் ரேஷ்மா காதல் உறுதியாக இருப்பது தெரிய வந்ததும் தனது மகளுக்கு அவசர அவசரமாக வரன் பார்த்து திருமண நிச்சயம் செய்திருக்கிறார்.  இந்த நிலையில் திடீரென்று கடந்த 29ஆம் தேதி அன்று காதலர்கள் மாணிக்கராஜ் -ரேஷ்மா இருவரும் ஊரை விட்டு வெளியேறி மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று அங்கே கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.   அங்கேயே தங்கியிருந்துள்ளார்கள்.

 கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இருவரும் சொந்த ஊரான வீரப்பட்டி கிராமத்திற்கு வந்திருக்கிறார்கள் . அங்கே மாணிக்கராஜன் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்திருக்கிறார்கள்.   நேற்று காலையில் மாணிக்க ராஜின் தாயார் மகாலட்சுமி வேலைக்குச் சென்றிருக்கிறார்.   இதனால் புதுமண தம்பதிகள் மாணிக்கராஜ், ரேஷ்மா இருவரும் வீட்டில் இருந்திருக்கிறார்கள்.  மாலையில் வேலை முடிந்தது மகாலட்சுமி வீட்டுக்கு வந்து இருக்கிறார்.   அப்போது மாணிக்க ராஜும் ரேஷ்மாவும் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்திருக்கிறார்கள்.   இதை பார்த்து கதறி அழுதிருக்கிறார்.

kk

சத்தம் கேட்டு வந்த  அக்கம்பக்கத்தினர் எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் சொன்னதும்,  விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சென்றனர்.  தடையைகள் நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். 

 புதுமண தம்பதிகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார்,   இரட்டை படுகொலை தொடர்பாக விசாரணை நடத்தி வந்ததில்,  இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு இருந்தது தெரிய வந்தது.  இதை அடுத்து முத்துக்குட்டி குடும்பத்தினரிடம் துருவித்துருவி விசாரித்த போது அவர் தான் கொலை செய்தது தெரிய வந்தது.  மகள், மருமகன் என்றும் நினைக்காமல் அரிவாளால் சரமாரியாக வெட்டி அவர்தான் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

 இதை அடுத்து முத்துக்குட்டி தலைமறைவாக இருப்பதும் தெரிய வந்ததால் அவரை தேடி வந்த நிலையில்  கைதாகி இருக்கிறார்.  

 புதுமண தம்பியை பெற்ற மகளையே தந்தையே வெட்டி  கொன்ற பயங்கரம் வீரப்பட்டி கிராமத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.