லிவ் இன் ரிலேஷன்ஷிப் - 14 முறை கருக்கலைப்பால் இளம்பெண் தற்கொலை

 
live

டெல்லியில் உள்ள நொய்டா பகுதியில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்த 30 வயது உடைய  வீட்டில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக தொங்கியிருக்கிறார்.  அக்கம் பக்கத்தில் இதைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.

li

 அந்த பெண் எழுதிய தற்கொலை கடிதத்தை போலீசார் மீட்டுள்ளனர். அந்த கடிதத்தில்,  தற்கொலைக்கு காரணம் தனது ஆண் நண்பர்தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.    தன்னுடன் இருக்கும் அந்த ஆண் நண்பர் தன்னை கட்டாயப்படுத்தி 14 முறை கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளதாக கூறியிருக்கிறார்.  அது மட்டுமல்லாமல் தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி திருமணம் செய்ய மறுத்து வந்ததாகவும் அதனால்  தற்கொலை செய்து கொள்ள போவதாக எழுதியிருக்கிறார்.

 அந்த பெண்ணின் தற்கொலை கடிதத்துடன் செல்போன் உள்ளிட்டவற்றையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

 அந்த பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும் பீகார் மாநிலம் முசாபர் பகுதியைச் சேர்ந்த அந்த பெண் கணவனை பிரிந்து 8 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் என்றும்,  வேலை நிமித்தமாக டெல்லியில் தங்கி இருந்திருக்கிறார். அப்போதுதான் அந்த ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டு  ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார். 

என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.  இதை அடுத்த் அந்த பெண்ணின் முன்னால் கணவரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.   இதையடுத்து அவர்களை வரவழைத்து பெண்ணின் உடலை  ஒப்படைத்துள்ளனர் போலீசார்.