தந்தைக்கு தூக்கு-தாய்க்கு சாகும்வரை ஆயுள்- மகள் நிம்மதி பெருமூச்சு

 
ra

பெற்ற மகளை ஏழு வயது முதல் 16 வயது வரைக்கும் பாலியல் வன்கொடுமை செய்து வந்த தந்தையால் 16 வயதில் அச்சிறுமி கர்ப்பம் அடைந்ததும் தாயும் தந்தையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கர்ப்பத்தை கலைத்திருக்கிறார்கள்.   அந்தத் தந்தைக்கு தூக்கு தண்டனையும் தாய்க்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

 சென்னை வேளச்சேரியில் வசித்து வந்தவர் முருகன்.  அவரது மனைவி புஷ்பா.   இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகள் உள்ளார்.   இந்த மகளை 7 வயதிலிருந்து தந்தை முருகன் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.

 கடந்த 2019ஆம் ஆண்டில் அச்சிறுமி 15 வயதாக இருந்தபோது முருகன் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்.   இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்து இருக்கிறார். கர்ப்பமானது தெரிந்ததும் தாயும் தந்தையும் மகளை அழைத்துச் சென்று கர்ப்பத்தை கலைத்து இருக்கிறார்கள்.

xz

 பெற்ற தாய் தந்தையால் தனக்கு இப்படி ஒரு கொடுமை நடந்து வருவதை கண்டு மன உளைச்சலுக்கு ஆளான அந்த சிறுமி,  பள்ளியில் படிக்கும் சக தோழிகளிடம் சொல்லி அழுது புலம்பி இருக்கிறார்.   2020ஆம் ஆண்டு வேளச்சேரி பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த சக தோழிகளிடம் அழுது புலம்பி இருக்கிறார்.   அப்போது சில மாணவிகள் ஆசிரியை ஒருவரிடம் இதுகுறித்து சொல்லி உதவி கேட்டு இருக்கிறார்கள்.

 இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியை ,  உடனே சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.  அந்த அமைப்பினர் நேரில் வந்து பள்ளியில் மாணவியிடம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள் .  அதன் பின்னர் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முருகன் மீதும் புஷ்பா மீதும் புகார் அளித்துள்ளனர்.

re

 இதையடுத்து புகாரின்பேரில் போலீசார் முருகன், புஷ்பா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.   இந்த வழக்கை போக்சோ நீதிமன்றம் விசாரித்து வந்தது. வழக்கின் விசாரணைகள் முடிவடைந்து நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவியின் தந்தை தூக்கு தண்டனையும் தாய்க்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்திருக்கிறார்.

தாய்க்கும் தந்தைக்கும் கிடைத்திருக்கும் இந்த தண்டனையினால் மகள் நிம்மதிபெருமுச்சு விட்டிருக்கிறார்.