சாகும்போது அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் கணவருக்கு ஆயுள் தண்டனை

 
f

இரண்டாவது திருமணம் செய்ததை எதிர்த்ததால் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது புதுக்கோட்டை நீதிமன்றம்.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூர் அடுத்த விட்டா நிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மதி(வயது45).  இவரது மனைவி மதளை அம்மாள்.  திருமணம் ஆகி 15 ஆண்டுகளாகியும் மதளை அம்மாளுக்கு குழந்தை இல்லை.  இதனால் மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார் மதி.  

ம

 இந்த விவரம் மதளை அம்மாளுக்கு தெரிய வந்ததும்,   இது குறித்து கணவரிடம் கேட்டு சண்டை போட்டு இருக்கிறார்.   இந்த விவகாரம் பெரிதாக ஆனதும் இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி இருக்கிறார் மதி.  இது தீயில் வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மதளை அம்மாளை  அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

 கடந்த 2021 ஆம் ஆண்டில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.   சாகும் தருவாயில் மதளை அம்மாள் அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் மதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.   மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி  எரித்து கொலை செய்த வழக்கில் அவரை கைது செய்திருந்தனர்.  இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது .   

விசாரணைகள் முடிந்து மதி மீது குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.   மதிக்கு ஆயுள் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து  தீர்ப்பு அளித்துள்ளார் நீதிபதி .  அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஐந்தாண்டு காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார் நீதிபதி.