வீடியோ வைரலானதால் கசிந்த விவகாரம்! ஆட்டோவில் சென்ற பெண்ணை நாலு பேர் சேர்ந்து செய்த கொடூரம்

 
க்

 ஆட்டோவில் சென்ற பெண்ணை நாலு பேர் சேர்ந்து இழுத்து புதருக்குள் கொண்டு சென்று ஆடைகளை கிழித்து பின்னர் செங்கல் சூளைக்கு இழுத்துச்சென்று வீடியோவும் எடுத்து வெளியிட அது வலைத்தளங்களில் வைரல் ஆகி விட்டது.  அதனால் இந்த விவகாரம் பெரிதாக வெடித்திருக்கிறது.

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் தானேபூர் பகுதி.   இப்பகுதியில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று இளம்பெண் ஒருவர் தனது அத்தையுடன் அருகிலுள்ள கிராமத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த உறவினரை பார்ப்பதற்காக ஆட்டோவில் சென்றிருக்கிறார்.  

வ்

 அப்போது நாலுபேர் கொண்ட கும்பல் அந்த ஆட்டோவை வழிமறித்து இருக்கிறார்கள்.  நாலு பேரும் ஆட்டோவில் இருந்த இளம் பெண்ணை பிடித்து வெளியே இழுத்திருக்கிறார்கள்.   தரதரவென்று இழுத்துக்கொண்டு புதருக்குள் சென்று பெண்ணின் ஆடைகளை கிழித்து பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் அங்கிருந்த செங்கல்சூளை பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறார்கள்.

 இதை வீடியோவாகவும் எடுத்து அவர்கள் சோசியல் மீடியாவில் வெளியிட,  இந்த வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.   இதையடுத்து இந்த விவகாரம் போலீசுக்கு தானாகவே தெரியவந்திருக்கும் நிலையில், தானேபூர் காவல் நிலையம் நடவடிக்கை எடுத்து வந்திருக்கிறது.  பெண்ணின் அத்தையும் விவகாரம் பெரிதாகி விட்ட நிலையில் தானேபூர் போலீசிடம் சென்று  புகார் அளித்திருக்கிறார்.  புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.