மகனை கடத்தி தாயை வீடியோ காலில் நிர்வாணமாக நிற்கச் சொல்லி மிரட்டல்

 
v

 மகனை கடத்தி வைத்துக்கொண்டு தாயை வீடியோ காலில் நிர்வாணமாக நிற்கச் சொன்ன அந்த வாலிபர் பின்னர் அந்த நிர்வாண வீடியோவை காட்டி மிரட்டி ஓட்டலுக்கு வர வைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.  அதை வீடியோவாக எடுத்து அதன் பின்னரும் அந்தப் பெண்ணை மிரட்ட அந்தப்பெண் வழிக்கு வராததால் ஆபாச வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறான்.  இதை அடுத்து அந்த பெண் போலீசில் சென்று கதற போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 விருதுநகர் மாவட்டத்தில் மம்சாபுரம் பகுதியில் வசித்து வருபவர் லதா.   49 வயதான இவருக்கு ஒரு பெண்ணும் ஒரு மகனும் உள்ளனர்.   மகன் முரளி மதுவுக்கு அடிமையாகி இருந்ததால் பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் விஜயலட்சுமி போதை தடுப்பு மைய மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார் லதா. கடந்த 14ம் தேதிதான்  அங்கு சிகிச்சை சேர்ந்து இருக்கிறார் முரளி. ஆனால் 16ஆம் தேதி போதை தடுப்பு சிகிச்சை மையத்திலிருந்து வெளியேறி அன்று இரவு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார் முரளி.

jj

 பின்னர் அங்கிருந்து சிவகங்கை மாவட்டம் திருபுவனம் சென்ற முரளி , அங்கு ரஞ்சித் என்பவரின் செல்போனிலிருந்து தாய் லதாவுக்கு தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.   உடனே வந்து தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு அழுது இருக்கிறார்.   இதை கேட்டு பதறிய தாய் லதா,  நேரில் வந்து அழைத்துச் செல்வதாக சொல்லி இருக்கிறார்  

 அடுத்து லதாவுக்கு தொடர்பு கொண்ட ரஞ்சித்,   உன் மகன் முரளியை என் கஸ்டடியில் தான் வைத்திருக்கிறேன்.  அவனை விடுவிக்க வேண்டும் என்றால் வீடியோ காலில் நீ நிர்வாணமாக  நின்று பேச வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்.   அதற்கு லதா மறுக்கவே,   உன் மகன் வேண்டும் என்றால் நீ இதை செய்துதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த ,  மகனுக்காக வேறு வழியில்லாமல் வீடியோ காலில் நிர்வாணமாக நின்று பேசி இருக்கிறார் லதா.

k

பின்னர் அந்த நிர்வாண வீடியோவை வைத்து நேரில் ஹோட்டலுக்கு வருமாறு அந்த பெண்ணை மிரட்டி இருக்கிறார்.   அந்த பெண்ணும் வேறு வழியே இல்லாமல் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்திருக்கிறார்.   அந்த பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள அசோக் பவன் ஹோட்டலுக்கு  லதாவை அழைத்துச் சென்று பாலியல் வனப்புணர்வு செய்து இருக்கிறார் ரஞ்சித்.

 அதையும் வீடியோவாக பதிவை செய்து கொண்ட ரஞ்சித் அந்த லதாவின் நிர்வாண படங்களை காட்டி மேலும் மிரட்டி இருக்கிறார்.  அதற்கு லதா ஒத்துக் கொள்ளவில்லை என்பதுதால்  லதாவின் உறவினர்களுக்கு அந்த படங்களை அனுப்பி வைத்து இருக்கிறார்.  இதனால்  கடும் மன உளைச்சலுக்கு ஆளான லதா, இதற்கு மேலும் ரஞ்சித்தை விட்டு வைக்கக் கூடாது என்று கண்ட்ரோல்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்திருக்கிறார்.  போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றார்கள்.