இறந்த தந்தையை உயிர்ப்பிக்க 2 மாத குழந்தை கடத்தி நரபலி கொடுக்க முயற்சி - பெண் கைது

 
n

பாசக்கார தந்தை உயிரிழந்து விட்டதால் அதை தாங்கிக் கொள்ளக் கூடிய முடியாத மகள்,  தந்தை எப்படியாவது உயிர் பிழைத்து விட வேண்டும் என்று நினைக்க, குழந்தையை நரபலி கொடுத்தால் உங்கள் தந்தை உயிர்த்தெழுந்து விடுவார் என்று யாரோ சொல்ல அதை நம்பிய அந்தப் பெண் இரண்டு மாத குழந்தையை கடத்தி நரபலி கொடுக்க ஏற்பாடுகள் செய்து வந்திருக்கிறார்.  அதற்குள் போலீசார் குழந்தையை மீட்டிருக்கிறார்கள்.

n

டெல்லியில் கிழக்கு கைலாஷ் பகுதியைச் சேர்ந்த அந்த பெண் தனது தந்தை திடீரென்று இறந்து விட்டதால் மிகவும் பாசமான தந்தை, அவர் மீது அதிக பாசம் வைத்திருந்த மகள் அவரின் இழப்பை தாங்க முடியாமல் தவித்து இருக்கிறார்.

 அப்போது அவரிடம் குழந்தையை நரபலி கொடுத்தால்  இழந்த தந்தை உயிர்த்தெழுந்து விடுவார் என்று யாரோ சொல்ல அதை  நம்பி இருக்கிறார் . தந்தையை உயிர்பிக்க இரண்டு மாத குழந்தையை கடத்திச் சென்று நரபலி கொடுக்க ஏற்பாடுகள் செய்து வந்திருக்கிறார். 

 இதற்குள் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் போலீசாருக்கு தெரிய வந்ததும், போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டதன் பேரில் குழந்தை நரபலி கொடுப்பதற்கு திட்டமிடப்பட்ட 24 மணி நேரத்தில் குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர். 

 சம்பந்தப்பட்ட அந்த பெண்ணை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.