இதுதான் ஆபீஸ் விசயமா? இதுக்குத்தான் வெளியூர் பயணமா? கையும் களவுமாக ஓட்டலில் கணவனை பிடித்த புதுமனைவி

 
l

 திருமணமான சில நாட்களிலேயே மனைவியை வீட்டில் தனியே விட்டுவிட்டு காதலியுடன் ஓட்டலில் அறை எடுத்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ள வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  வரதட்சணைக்காக கல்யாணம் செய்து கொண்ட அந்த நபர் காதலியை விட்டு பிரிய மறுக்கிறார் அந்த வாலிபர்.

 ஆந்திர மாநிலத்தில் நெல்லூர் மாவட்டத்தில் இந்து குருபெண்டா பகுதியைச் சேர்ந்தவர் சலம் வெங்கடேசன்.  இவர் அரசு அலுவலராக உள்ளார்.  தொட்டவள்ளி மண்டலம் பொட்டல பொடி அலுவலகத்தில் உதவி பொறியாளராக இருந்து வருகிறார்.  இவருக்கு அண்மையில்தான்  சுமாசந்து என்கிற பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கிறது.   அரசு அதிகாரி என்பதால் பெண் வீட்டினர் இடையே அதிக வரதட்சனை வாங்கி இருக்கிறார்.  

h

திருமணமான சில நாட்கள் சந்தோஷமாக இருந்திருக்கிறார்.  அதன்பின்னர்  கணவனின் நடத்தையில் மனைவிக்கு சுமாவுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. தொடர்ந்து கவனித்து வந்தபோதுதான் கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது.  வரதட்சணைக்காகவே தன்னை திருமணம் செய்து கொண்டிருதும் தெரிய வந்திருக்கிறது .

இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஆபீஸ் விசயமாக வெளியூர் போகிறேன் என்று சொல்லிவிட்டு சென்ற  வெங்கடேஷ் ஹோட்டலில் காதலியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.  இதை கண்டுபிடித்து விட்ட சுமா போலீசாருக்கு  தகவல் தெரிவித்து விட்டு,  உறவினர்களையும் அழைத்துச் சென்று கையும் களவுமாக பிடித்திருக்கிறார் .

பின்னர் போலீசார் அறிவுறுத்தலின் பேரில் கவுன்சிலிங் கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.   ஆனால் அதன் பின்னரும் வெங்கடேஷ் மாறவில்லை. கொடவலூர் பகுதியில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு காதலியை அழைத்துச் சென்று தாலி கட்டியிருக்கிறார்.   இதை அறிந்த சுமா அங்கு சென்றபோது அவரை வெங்கடேசன் உறவினர்கள் தாக்கி இருக்கிறார்கள்.   உடனே சுமா போலீசில் புகார் கொடுக்கவும்,  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.