மனைவி தூக்குபோட்டதால் கணவரும்... மருமகள் தூக்கு போட்டதால் மாமியாரும் தூக்குபோட்டு தற்கொலை

 
g

மனைவி தூக்கு போட்டதால் கணவரும் தூக்கு போட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.  மருமகள் தூக்கு போட்டதால் மாமியாரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  புதுச்சேரி மாநிலத்தில் திருபுவனம் அடுத்த சன்னியாசி குப்பத்தில் நடந்துள்ளது இந்த சம்பவம்.

புதுச்சேரி மாநிலத்தில் திருபுவனம் அடுத்த சன்னியாசி குப்பம் பகுதியை சேர்ந்த ஆனந்த்,  நாகை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த சந்தியாவை காதலித்து கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். சந்தியா செவிலியராக வேலை செய்து வந்துள்ளார்.

gd

 திருமணத்திற்கு பின்னர் ஆனந்த், சந்தியா,  மாமியார் அன்னக்கிளி மூவரும்  சன்னியாசி குப்பத்தில் வசித்து வந்துள்ளனர்.  அப்போது சந்தியாவுக்கும் மாமியார் அன்னக்கிளிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.   தாயாருக்கும் மனைவிக்கும் இடையே நின்று ஆனந்த் சமாதானம் செய்து வைத்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று  சண்டை நடந்த போது இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சந்தியா அதிகாலையில் வீட்டில் உள்ள அறையில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.   காலையில் ஆனந்த் எழுந்த போது மனைவி தூக்கில் பிணமாக தங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.   இதை பார்த்துவிட்டு அன்னக்கிளி போட்ட சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆனந்தத்தை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.  அங்கு ஆனந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் மருமகள் இறந்த துக்கம்  தாங்காமலும்,  மகனின் தற்கொலை முயற்சியை தாங்க முடியாமலும் பார்த்தும் மனம் வருந்திய அன்னக்கிளி வீட்டிலிருந்து இன்னொரு சேலையை எடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  

 மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த உறவினர்கள் அன்னக்கிளி தூக்கில் பிணமாக தூங்குவதை பார்த்து கடும் அதிர்ச்சிக்கு ஆளாக இருக்கிறார்கள்.  தகவல் அறிந்த திருபுவனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருக்கிறார்கள்.  மருமகள்,  மாமியார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.