புருஷன எனக்கு பிடிக்கல; அதனால் வலிப்பு நோயால் இறந்ததாக நாடகமாடினேன்...

 
ll

கணவனுடன் வாழ எனக்கு விருப்பமில்லை.  அதனால்தான் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு வலிப்பு நோயால் இறந்ததாக நாடகமாடினேன் என்று பகிர் வாக்குமூலம் அளித்திருக்கிறார் மனைவி.

 கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு பகுதியில் உள்ள கோனனகுன்டே.    இந்த ஊரில் வசித்து வந்தவர் மகேஷ்(30).   இவரது மனைவி சில்பா(27).   திருமணத்திற்கு பின்னர் கணவருடன் அவ்வளவாக விருப்பம் இல்லாமலேயே வாழ்ந்து வந்திருக்கிறார்  சில்பா    அதற்கு காரணம்,   திருமணத்திற்கு முன்பே சில்பாவுக்கும் சந்தோஷ் என்பவருக்கும் காதல் இருந்துள்ளது.    இந்த காதலுக்கு சில்பாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   அதனால் வேறு வழி இன்றி பெற்றோர்கள் செய்து வைத்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு மகேசை திருமணம் செய்து இருக்கிறார்.

f

 ஆனாலும் திருமணத்திற்கு பின்னர் மகேஷ் உடன் விருப்பம் போல் வாழாமல் இருந்து,   தனது காதலன் சந்தோஷை அடிக்கடி வர வைத்து ஊர் சுற்றி உல்லாசமாக இருந்து வந்துள்ளார் சில்பா.   இப்படி எத்தனை நாளைக்கு தான் இருப்பது?  இந்த விவகாரம் கணவருக்கு தெரிந்து விட்டால் நம் உறவு என்ன ஆவது?  என்று கவலைப்பட்ட சில்பா,   கணவனை கொன்று விட முடிவெடுத்திருக்கிறார்.

 அதன்படி கடந்த இரண்டாம் தேதி அன்று கள்ளக்காதலன் உதவியுடன் கணவர் மகேசை கழுத்தை நெரித்து கொன்டிருக்கிறார்.   பின்னர் அவரது உடலை காரில் ஏற்றிக்கொண்டு மாண்டியாவுக்கு சென்று இருக்கிறார்.    அங்கிருந்த படி கணவர் குடும்பத்துக்கு போன் செய்து,  கணவர் வலிப்பு நோயால் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்து இருக்கிறார்.  

m

கதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த மகேஷின் பெற்றோர் மகனின் உடலை பார்த்து கதறி அழுது உள்ளனர்.   அப்போது மகன் கழுத்தில் காயங்கள் இருந்ததைக் கண்டு சந்தேகம் அடைந்திருக்கிறார்கள்.   உடனே போலீசில் இது குறித்து புகார் தெரிவித்து இருக்கிறார்கள்.   போலீசாரும் மகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.   பிரேத பரிசோதனையில் மகேஷ் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

 இதன் பின்னர் சில்பாவிடம் போலீசார் கிடுக்கிப் பிடி விசாரணை நடத்திய போது சில்பா நடந்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்.   கணவனுடன் வாழ விருப்பமில்லாததால்  காதலனுடன் சேர்ந்து அவரை கொலை செய்து விட்டு வலுப்பு நோயால் இறந்துவிட்டார் என்று நாடகமாடினேன் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார்.   இதன் பின்னர் சில்பாவும் சந்தோஷும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.