கணவரின் பாலியல் தொல்லை! தினமும் மகளை பூட்டி வைத்த தாய்! சாவியை டெய்லரிடம் கொடுத்து சென்றதால் ஒரு மாதம் நடந்த கொடுமை

 
si

பெற்ற மகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை அளித்து வந்ததால் கணவரிடம் இருந்து மகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சமையல் வேலைக்கு செல்லும் போது தினமும் வீட்டை பூட்டிவிட்டு சென்றிருக்கிறார் அந்த தாய்.   ஆனால் சாவியை திருடன் கையில் கொடுத்தது மாதிரி பக்கத்து வீட்டு டெய்லரிடம் கொடுத்துச் சென்றிருக்கிறார். கடைசியில் அந்த தாய்க்கு அந்த அதிர்ச்சி செய்தி கிடைத்திருக்கிறது.   

 மும்பையில் தானே டைகர் பகுதி மதராசாவில் சமையல் வேலை பார்க்க வருகிறார் அந்த பெண்.   அப்பெண்ணின் கணவர் தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார் என்பதால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்,  கணவனிடம் இருந்து மகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தினமும் சமையல் வேலைக்குச் செல்லும் போது மகளை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றிருக்கிறார்.   ஆனால் சாவியை பக்கத்து வீட்டு டெய்லரிடம் கொடுத்துச் சென்றிருக்கிறார்.

r

 கடந்த டிசம்பர் மாதத்தில் தாய்,  வீட்டில் இருக்கும் போது டெய்லர் வீட்டிற்கு சென்றிருக்கிறார் அந்த சிறுமி.  அப்போது பாலியல் தொல்லை கொடுத்தவர், இதை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.   நடந்த இந்த விவகாரம் தெரியாமலேயே அந்த சமையல்கார தாய் அந்த டெய்லரிடம் சாவியை கொடுத்துச் சென்றிருக்கிறார். 

 அந்த பெண் வேலைக்குச் சென்றதும் வீட்டை திறந்து அந்த சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.   ஒரு மாதத்திற்கு மேலாக இப்படி பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.   பெற்ற தந்தையிடம் இருந்து தப்பிக்க தாய் தன்னை வீட்டில் அடைத்து வைத்து செல்வது ஒரு பக்கம் இருக்க,   பக்கத்து வீட்டு டெய்லரிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று நினைத்த அந்த சிறுமி,   பாலியல் பலாத்காரத்தை செல்போனின் வீடியோவாக எடுத்து இருக்கிறார்.

 வழக்கம் போல அந்த சிறுமியை கதவை திறந்து கொண்டு தன் வீட்டிற்கு அழைத்திருக்கிறார்.   முடியாது என்று மறுக்கவும் தரதரவென்று இழுத்துச் சென்றிருக்கிறார். இதை பார்த்துவிட்ட பக்கத்து வீட்டு பெண் டெய்லரை கண்டித்து இருக்கிறார் .  அப்போது தனக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லி வீடியோ ஆதாரத்தை காட்டி இருக்கிறார்.  அதனால் டெய்லர்  தப்பிக்க முடியாமல் போய் இருக்கிறது.  

 வேலை முடிந்து வந்த  தாய் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் சென்று புகார் அளித்துள்ளார்.   போலீசார் போக்சோ, பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டெய்லர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் .  அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்