நடுரோட்டில் மனைவியை ஓட ஓட வெட்டி படுகொலை செய்த கணவன்

 
murder

முசிறி அடுத்த துலையாநத்தம் கிராமத்தில் நடுரோட்டில் மனைவியை ஒட ஒட வெட்டி படுகொலை செய்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Can't police prevent a murder?

முசிறி தாலுக்கா தா.பேட்டை ஒன்றியம் துலையாநத்தம் கிராமம் புது காலனியில் வசிப்பவர் ரமேஷ் (42). இவரது மனைவி கோமதி  (34). இவர்களுக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஜனனி (5) மகளும் ரத்தீஸ்வரன் (3) மகனும் உள்ளனர். ரமேஷ் போர்வெல் வண்டியில் ட்ரில்லர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். முதல் மனைவி உடல்நல குறைவு காரணமாக இறந்து போனதால் இரண்டாவதாக கோமதியை திருமணம் செய்துள்ளார். 

இந்நிலையில் கோமதிக்கும் ரமேஷுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு நடைபெறுவது வழக்கம். மேலும் ரமேஷ் ,கோமதியிடம் தனிக்குடித்தனமாக வேறு பகுதிக்கு போகலாம் என அழைத்துள்ளார். அதில் உடன்பாடு இல்லாத கோமதி கணவனின் விருப்பத்தை மறுத்ததோடு வேறு பகுதிக்கு தனி குடித்தனம் செல்ல சம்மதிக்கவில்லை. இதனால் கடந்த 10 தினங்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு நடந்துள்ளது. இதனால் கோமதி கணவன் ரமேஷ்டன் பேசாமல் கோபித்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட ரமேஷ் ஆத்திரமடைந்து மனைவியை அடித்து உதைத்துள்ளார். 

அடி தாங்கமுடியாமல் வீட்டிலிருந்து ரோட்டிற்கு வெளியே ஓடி வந்த மனைவி கோமதியை  துரத்தி கொண்டு வந்த ரமேஷ் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கோமதி ரத்த வெள்ளத்தில் சடலமாக சாய்ந்தார். பின்னர் சதீஷ் மனைவியை வெட்டிய அரிவாளுடன் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் போலீசாரிடம் சரணடைந்தார். மனைவியை வெட்டி கொலை செய்த விபரத்தையும் அங்கிருந்த போலீசாரிடம் கூறினார். அதை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஜெம்புநாதபுரம்  போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோமதியின் சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தை முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் நேரில் பார்வையிட்டு விசாரணை செய்தார். மனைவியை கொலை செய்த ரமேஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மனைவியை பட்டபகலில் நடு ரோட்டில் கணவனே மனைவியை வெட்டி  கொலை விட்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.