மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற காதல் கணவன்

 
murder

சிவகாசியில் கள்ளக்காதலனுடன் கையும் களவுமாக சிக்கிய மனைவியின் மீதான கோபத்தால் கள்ளக்காதலனை கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்.

Murder under Indian Penal Code: All you need to know about it


சிவகாசி அருகே உள்ள விசுவநத்தம் காகா காலனியில் வசிக்கும் தம்பதியினர் பாண்டி செல்வம்(25)- ரூபா(23). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒன்றரை வயதில் திவ்யபாரதி என்ற மகள் உள்ளார். பாண்டி செல்வம் பூ வியாபாரம் செய்து வரும் நிலையில், ரூபா எட்டக்காபட்டியில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். 

ரூபா பணி புரிந்து வரும் பட்டாசு தொழிற்சாலையில் சாத்தூர் அருகே  பட ந்தால் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி (26) என்ற வாலிபர் தொழிற்சாலை வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ரூபாவுக்கும், கருப்பசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டு அதுவே கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதற்கிடையே பாண்டிச்செல்வம் சொந்த அலுவல்  காரணமாக விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூருக்கு சென்று விட்டு இன்று அதிகாலை வீடு திரும்பி உள்ளார். தனது கணவன் பாண்டிசெல்வம் நேற்று இரவில் வெளியூர் சென்று இருப்பது குறித்து ரூபா தன்னுடைய கள்ளக்காதலன் கருப்பசாமிக்கு தகவல் தெரிவித்து தனது வீட்டுக்கு வரவழைத்து உள்ளார். 

இன்று அதிகாலை வீடு திரும்பிய பாண்டி செல்வம் வீட்டிற்குள் தனது மனைவியுடன் வேறொரு நபர் இருப்பதை அறிந்து வீட்டின் வெளிப்பக்கமாக கதவை பூட்டி உள்ளார். இருந்தபோதிலும் கருப்பசாமி வீட்டு கதவை உடைத்துக் கொண்டு வெளியேறி தப்பியோட முயன்ற போது, அவரை தலையில் கட்டையால் தாக்கிய பாண்டி செல்வம் கல்லால் அடித்துள்ளார். இதனால் படுகாயம் அடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பசாமியின் பிரேதத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ரூபா- பாண்டிசெல்வம் தம்பதியினரை கைது செய்தனர்

 .


////////