மனைவி கொலையை செய்து புதைத்துவிட்டு 11 ஆண்டுகளுக்கு பின் எலும்புக்கூட்டை தோண்டி எடுத்த ரவுடி

 
murder

சாலை போட ரோடு தோண்டுவார்கள் என்பதால், 11 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி கொலையை செய்து புதைத்த இடத்தில், எலும்புக்கூட்டை தோண்டி எடுத்த பிரபல ரவுடி கூட்டாளிகளுடன் கைதான சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரியில் 9 ஆண்டுகளுக்கு முன்பு பரோலில் வந்து கொலை: பிரபல ரவுடி உள்பட  4 பேர் கைது பின்னணி | puducherry 4 arrested for murder case - hindutamil.in

புதுச்சேரி முதலியார்பேட்டை அனிதா நகரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி பாஸ்கர். வழக்கு ஒன்றில் தண்டனை பெற்ற சிறைக்கு சென்ற பாஸ்கர், கடந்த 2015ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ரவுடி பாஸ்கர், முதலியார்பேட்டை உழந்தை ஏரிக்கரையில் ஆதரவாளர்களுடன் குழித்தோண்டி சடலத்தை எடுத்ததாக சிறப்பு அதிரடிப்படைக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. இதையடுத்து  பாஸ்கரின் கூட்டாளிகள் அனிதாநகரைச் சேர்ந்த பாம் வேலு, கருப்பு சரவணன், சக்தி நகர் மனோகர் ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது கடந்த 2012ல் பாஸ்கர் மனைவி எழிலரசியை கொலை செய்து குழித்தோண்டி புதைத்ததாகவும், அங்கிருந்த எலும்பு கூட்டை எடுத்ததாக பரபரப்பான வாக்குமூலம் தந்தனர்.


இதையடுத்து பாஸ்கரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இவர் பிரபல தாதா கர்ணா தம்பி ஆவார். அப்போது அளித்த வாக்குமூலத்தில், சிறையில் நானும், அண்ணாவும் சிறையில் இருந்தோம். அதனால் வெளியில் எங்கள் வேலைகளை ஆதரவாளர் சுருட்டை செந்தில் பார்த்து கொண்டார். அப்போது எனது மனைவி எழிலரசிக்கும் சுருட்டை செந்திலுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது சிறையில் இருந்த எனக்கு தகவல் கிடைத்தது. கடந்த 2012ல் 30 நாட்கள் பரோலில் வந்தேன். மனைவி எழிலரசி கிருமாம்பாக்கத்தில் அவரது தங்கை வீட்டில் இருந்தார். அங்கு நானும் கூட்டாளிகள் பாம் வேலு, கருப்பு சரவணன், மனோகர் ஆகியோருடன் சென்று, கிருமாம்பாக்கத்திலிருந்து காரில் எனது மனைவியை அழைத்து வரும் வழியில், சேலையில் கழுத்தை நெரித்து கொன்றோம். திட்டமிட்டப்படி ஏரிக்கரையில் குழிதோண்டிய இடத்தில் புதைத்தோம். உடலில் சீக்கிரம் மக்கிப்போக யூரியா போட்டோம். பரோல் முடிந்தவுடன் சிறைக்கு சென்றேன். 2015ல் ஜாமீனில் வெளியே வந்தேன். 

தற்போது ஏரிக்கரையில் ரோடு போட உள்ளனர். அதனால் மாட்டிவிடுவோம் என்பதால் இரு மாதங்கள் முன்பு ஜேசிபி மூலம் தோண்டி, மனைவி எலும்புக்கூடு, சேலை கிடைத்தது. ஏரியில் எலும்புக்கூட்டை வீசிவிட்டு, சேலையை எரித்து விட்டோம் என்றார்.


சிறையில் உள்ள தாதா கர்ணாவின் மகன் விக்ரமாதித்யன் புதுச்சேரி மாநில பாஜக இளைஞர் அணி துணை தலைவராக உள்ளார். அவர் மூலம் கர்ணாவை சிறையில் இருந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.