பட்டபகலில் நடுரோட்டில் மனைவின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவன்!

 
murder

தூத்துக்குடியில் பட்ட பகலில் நடு ரோட்டில் வைத்து மனைவியின் கழுத்தை ஆக்சா பிளேடு கொண்டு அறுத்து கொலை செய்ய முயன்ற பரபரப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி அண்ணா நகர் 4வது தெருவை சேர்ந்தவர் ஆண்டனி ராஜ். கட்டிட  தொழிலாளியான இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு மாதவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆண்டனி ராஜ் மதுபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு இன்று மதியம் ஆண்டனி ராஜ் அண்ணா நகரில் சென்று கொண்டு இருந்த தனது மனைவி மாதவியை வழிமறித்து அவர் கழுத்தை ஆக்ஸா பிளேடு கொண்டு அறுத்து கொலை செய்ய முயன்றார். இதைப் பார்த்து மாதவி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காப்பாற்றினர்.

இந்நிலையில் கழுத்தில் பலத்த காயமடைந்த மாதவி உயிருக்கு ஆபத்தான நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி தென்பாகம் போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி  ஆண்டனி ராஜ்-ஐ தேடி வருகின்றனர். பட்டப் பகலில் மனைவியை நடு ரோட்டில் வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.