குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை குத்திக் கொன்ற கணவன்

 
murder

அரியலூர் அருகே குடும்பம் நடத்த தன்னுடன் வர மறுத்த மனைவியை குத்தி கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

Agra Police solves quadruple murder in less than a week - India Today


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் ஜாஃபர். இவர் மாட்டு கறி வெட்டும் கூலி தொழிலாளி. இவரது மனைவி ரியாஸ். இவர் மும்பையை சேர்ந்தவர். தற்பொழுது உடையார் பாளையத்தில் உள்ள பெருமாள் கோவில் அருகே வசித்து வருகின்றனர்.கடந்த ஆறு மாதங்களாக மனைவியை அடிக்கடி சென்று பார்த்து வரும் ஜாஃபர்,  மனைவியை ஜெயங்கொண்டத்தில் தன்னுடன்வந்து வசிக்க வருமாறு அழைத்துள்ளார்.


ஆனால் கழிவறை மற்றும் குளியலறை கட்டி விட்டு என்னை அழைத்தால்தான் வருவேன் என அவர் கூறிவந்துள்ளார். இந்நிலையில் இரவு மது அருந்திவிட்டு போதையில் வந்த ஜாஃபர் மனைவியிடம் தன்னுடன் வருமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் ரியாஸ் வர மறுக்கவே மாடு வெட்டும் கத்தியை வைத்து மனைவியை குத்திக்கொலை செய்துவிட்டார். பின்னர் மனைவி அருகே படுத்துக் கொண்டு போதையில் அழுது கொண்டிருந்தார். இதனை பார்த்த உறவினர்கள் உடையார்பாளையம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார், ஜாஃபரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.