சந்தேகத்தால் மனைவி இரும்பு கம்பியால் அடித்துக் கொலை

 
ஹ்


 நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்திருக்கிறார்.  கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தவரை பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டும் என்று வீட்டிற்கு அழைத்து வந்து அடித்துக் கொலை செய்திருக்கிறார் அந்த கட்டிட தொழிலாளி. 

ஆந்திர மாநிலத்தில் திருப்பதி  மாவட்டத்தை சேர்ந்த சூலூர்பேட்டையில் வசித்து வருபவர் செங்கையா.   இவரது மனைவி உமா மகேஸ்வரி.   இத்தம்பதிக்கு கிருத்திகா, விக்னேஷ்வர் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

ப்

 மனைவி உமாமகேஸ்வரியின் நடத்தையில் செங்கையாவுக்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது.   இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.   ஒரு கட்டத்திற்கு மேல் கணவனின் சந்தேகத்தை பொறுக்க முடியாமல் உமா மகேஸ்வரி குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்திருக்கிறார்.  

 பொங்கல் பண்டிகை வந்ததால் பண்டிகை கொண்டாட மனைவியை வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு மாமனார் மாமியாரிடம் சென்று கேட்டிருக்கிறார் செங்கையா.
 உமா மகேஸ்வரியை செங்கையா உடன் அனுப்பி வைத்திருக்கிறார்கள் . குழந்தைகளை தாய் வீட்டிலேயே விட்டுவிட்டு கணவருடன் சென்றிருக்கிறார் உமா மகேஸ்வரி.

 வீட்டிற்கு வந்த பின்னர் தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.  அப்போது ஆத்திரமடைந்து செங்கையா,  இரும்பு கம்பியை எடுத்து மனைவியின் தலையில் பின்புறத்தில் ஆவேசமாக தாக்கியிருக்கிறார்.   இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் விழுந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.   அதன் பின்னர் காலஹஸ்தி நகர காவல் நிலையத்திற்கு சென்று மனைவியை கொன்று விட்டதாக சொல்லி சரண் அடைந்திருக்கிறார்.

 செங்கையா அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உமா மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காலஹஸ்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். செங்கையாவை கைது செய்து அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றார்கள்.