மாணவிகளுக்கு தொல்லை - தலைமை ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை

 
m

போக்சோ வழக்கில் கைதான பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம்.

 தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் அரசு துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் சந்திரசேகரன்.   இந்த தலைமை ஆசிரியர் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.   இது குறித்து  மாணவிகள் பெற்றொரிடம் புகார் அளிக்க, பெற்றோர்கள் கல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

p

இதையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் உதவி தொடக்க கல்வி அலுவலர் பழனியம்மாள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தலைமையாசிரியர் சந்திரசேகரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

 இது குறித்த வழக்கு தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  இந்த வழக்கின் விசாரணைகள் முடிந்து தற்போது தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது. நீதிபதி சையத் பர்கத்துல்லா,   மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை தந்த தலைமை ஆசிரியர் சந்திரசேகரனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.   மேலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.