மனைவியின் புடவையில் தொங்கிய புதுமாப்பிள்ளை - திருமணமான 11 நாளில் சோகம்

 
su

புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.   திருமணமான 11 நாளில் இந்த சோகம் நிகழ்ந்திருக்கிறது .  

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாமல் இந்திரா  நகர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்.   இவர் மத்திய மீன்வளத்துறையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.  இவரை  கடந்த ஏழாம் தேதி அன்று ராணிப்பேட்டை மாவட்டம்  வேம்பி கிராமத்தைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.  திருமணத்திற்கு பின்னர் அசோக்க்கும் காயத்ரியும் பெற்றோருடன் தாமலில் வசித்து வந்துள்ளனர்.

c

 இந்த நிலையில் நேற்று முன்தினம்  அசோக்கின் தாய், தந்தை, மனைவி காயத்ரி அனைவரும் வெளியே சென்று இருக்கிறார்கள்.  வீட்டில்  யாரும் இல்லாத அந்த நேரத்தில் மனைவி காயத்ரியின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் அசோக்.   வெளியே சென்ற மூன்று பேரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அசோக் தூக்கில் சடலமாக தொங்கி இருந்திருக்கிறார்.

 இதை பார்த்து சத்தம் போட்டு இருக்கிறார்கள்.   இதை அடுத்து தூக்கு கயிறை  அறுத்து அசோக்கை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு போயிருக்கிறார்கள். அங்கு அசோக்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அசோக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மது பழக்கத்திற்கு அசோக் அடிமையாகி இருந்ததால் அவருக்கும் காயத்ரிக்கும் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.  இந்த  தகராறில் மணமடைந்து  தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது தெரிய வந்திருக்கிறது.