15 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடைக்காரர்

 
si

பதினைந்து பள்ளி மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்து வந்த மளிகை கடைக்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  கோவை பகுதியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள்,  அருகே இருக்கும் மளிகை  கடையில் உணவுப் பொருட்கள் வாங்கி வந்துள்ளனர்.  இதில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரைக்கும் படிக்கும் மாணவிகள் தனியாக சென்று உணவு பொருட்கள் வாங்குகின்ற போது அந்த மளிகை கடையின் 62 வயது உரிமையாளர் நடராஜன் அந்த சிறுமிகளுடன் ஆபாசமாக பேசி,  தொட்டு தொட்டு பேசி பாலியல் செயலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.  

ko

 சில மாநில மாணவிகளுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்து வந்திருக்கிறார் .  இந்த விவகாரம் பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு தெரியவந்திருக்கிறது.  பள்ளியின் தலைமை ஆசிரியை மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு பற்றி விளக்கி இருக்கிறார்.   அப்போது ஒரு 13 வயது மாணவி தலைமை ஆசிரியையிடம் மளிகை கடைக்காரரின் செயல்களை பற்றி சொல்லி இருக்கிறார்.

 அந்த மாணவியை சொன்னதை அடுத்து 14  மாணவிகள் தங்களுக்கும் அந்த மளிகை கடைக்காரர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.  கடந்த நான்கு ஆண்டுகளில் 9 முதல் 13 வயதுக்கு உட்பட்ட 15 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.  இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியை,  பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 புகாரின் பேரில் நடராஜனை பிடித்து விசாரணை நடத்தினர் போலீசார்.   அப்போது பள்ளி மாணவிகள் மட்டுமல்லாமல் அப்பகுதியைச் சேர்ந்த சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்திருக்கிறது.   இதை அடுத்து போக்சோ வழக்கு பதிவு செய்து நடராஜனை கைது செய்துள்ளனர் போலீசார்.