காதலன் மீது ஐந்து லிட்டர் ஆசிட்டை ஊற்றிய காதலி

 
ac

ஒருதலையாக காதலித்து வந்த அந்த இளம் பெண்,  தனது காதலை ஏற்கவில்லை என்பதற்காக காதலன்  மீது ஐந்து லிட்டர் ஆசிட்டை ஊற்றி இருக்கிறார்.   இதில் அந்த வாலிபர் கை, கால், முகம் அனைத்தும் பாதிக்கப்பட்டு  உயிருக்கு ஆபத்தான நிலையில் ஷியாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

 அரியானா மாநிலத்தில் பஹதுர்கர் என்கிற பகுதியை சேர்ந்தவர் சியாம்.   25 வயது இந்த வாலிபர் பெற்றோர் இல்லாததால் அத்தை வீட்டில் வளர்ந்து வந்திருக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த அஞ்சலி என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.   இந்த பழக்க வழக்கத்தில் அஞ்சலியை ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்திருக்கிறார்கள்.    இதனால் ஷியாம் தன்னை காதலிப்பதாகவே நினைத்து வந்திருக்கிறார் அஞ்சலி. 

as

  திடீரென்று ஒரு நாள் தனது பெற்றோர்களை அழைத்துக் கொண்டு ஷியாமை  மாப்பிளை கேட்டுச் சென்று இருக்கிறார் அஞ்சலி.   அப்போது ஷியாமிடம் அவரது அத்தை இது குறித்து பேச,  தனக்கு இது பற்றி எதுவுமே தெரியாது.   தான் அஞ்சலியை காதலிக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார்.  இதனால் அதிர்ந்து போய் இருக்கிறார்கள் அனைவரும் .

 அதன் பின்னர் அஞ்சலி குறித்து ஷியாமும் அவரது அத்தையும் விசாரிக்க தொடங்கி இருக்கிறார்கள்.   அப்போதுதான் அஞ்சலிக்கு ஏற்கனவே திருமணம் ஆனதும்,  அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரிய வந்திருக்கிறது.   இதனால் அஞ்சலியை திருமணம் செய்ய ஷியாமுக்கும் அத்தைக்கும் மனம் வரவில்லை.  

 இதில் ஆத்திரமடைந்த அஞ்சலி,   ஷியாமிடம் அடிக்கடி தகராறில்  ஈடுபட்டு வந்திருக்கிறார்.   சம்பவத்தன்று பால் வாங்குவதற்காக கடைக்கு சென்று இருக்கிறார் ஷியாம்.   அவரை  வழிமறித்து தகராறு செய்திருக்கிறார் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறார் சியாம் அதற்கு மறுக்கவே தான் முன்கூட்டியே திட்டமிட்டு எடுத்துச் சென்றிருந்த அஞ்சலி.  

அப்போதும் தன்னை திருமணம் செய்த்கொள்ளும்படி கேட்க, அதற்கு ஷியாம் மறுக்க,  5 லிட்டர் கேனில் நிரப்பி இருந்த ஆசிட்டை எடுத்து ஷியாம் மீது ஊற்றி இருக்கிறார்.  கை, கால், உடல் முழுவதும் ஆசிட் பட்டு  கதறி துடித்திருக்கிறார்.   அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

 உயிருக்கு ஆபத்தான நிலையில் ஷியாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  தகவல் கேட்டு விரைந்து வந்த போலீசார் அஞ்சலியை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 ஒரு தலை காதலால் நிகழ்ந்த இந்த சம்பவம்  ஹரியானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.