கள்ளக்காதலன் நடத்தையில் காதலிக்கு சந்தேகம் - கள்ளக்காதலி நடத்தையில் காதலனுக்கு சந்தேகம் - கொலையில் முடிந்த கொடூரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தாலுக்கா உமையாள்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரின் மனைவி தமிழ்மணி. திருமணம் நடந்து 20 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
குடும்ப தகராறில் திடீரென்று தமிழ்மணி, கணவன் -மகன்களை பிரிந்து கீழவாடியில் உள்ள தாய் வயிற்றில் வசித்து வந்துள்ள மூன்று ஆண்டுகளாக வசித்து வந்துள்ள தமிழ்மணி, அப்பகுதியில் உள்ள செங்கல் சூலையில் வேலை செய்து வந்துள்ளார். அதே செங்கல் சூளையில் வேலை செய்து வந்த செந்தில் தன்னுடன் 10 வயது குறைந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது .
அந்த பழக்கம் கள்ள உறவாக மாறி இருக்கிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்கள். கணவனை பிரிந்து தமிழ்மணி வாழ்ந்து வந்ததால் பாலுாரான் படுகையில் வீடியோ எடுத்து தமிழ்மணி உடன் செந்தில் வசித்து வந்திருக்கிறார். கள்ளக்காதலர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
இருவருக்கும் சந்தேகத்தால் இந்த தகராறு ஏற்பட்டு வந்து இருக்கிறது. தமிழ்மணி வேறு யாருடன் தொடர்பில் இருக்கிறாரா என்று செந்திலுக்கு சந்தேகம். செந்தில் வேறு யாராவது பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறாரா என்று தமிழ்மணிக்கு சந்தேகம். இதனால் இருவருக்கும் இடையே தினமும் தகராறு வந்திருக்கிறது.
சம்பவத்தன்று இந்த தகராறு நடந்த போது ஆத்திரத்தில் தமிழ் மணியை கடுமையாக தாக்கி இருக்கிறார் செந்தில். இதில் சம்பவ இடத்திலேயே தமிழ் மணி உயிரிழந்திருக்கிறார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் சொல்ல, போலீசார் தமிழ்மணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு கொலை குறித்து வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்துள்ளனர்.