கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை!தூக்கு தண்டனை கைதிகள் படிக்க ஐகோர்ட் அனுமதி

 
g


சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை கைதிகள் இரண்டு பேரும் கல்வியை தொடர ஐகோர்ட் அனுமதி அளித்திருக்கிறது .

மகாராஷ்டிரா மாநிலத்தில் அகமது நகர் கர்ஜத் தாலுகாவில் அமைந்திருக்கும் கோபர்டி கிராமம்.  இக்கிராமத்தில்கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் தேதி அன்று அப்பகுதியில் உள்ள 14 வயது சிறுமியை கடத்திச் சென்று மூன்றுபேர் பாலியல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.  பாலியல் வன்கொடுமைக்கு பின்னர் அந்த சிறுமியை கொலை செய்தனர்.

p

 இந்த வழக்கில் நிதின்  (28), ஜித்தேந்திர பாபுலால் ஷிண்டே (21), சந்தோஷ் பவல் (29)  3 பேர் கைது செய்யப்பட்டார்கள் .   இந்த மூன்று பேருக்கும் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

 3 பேரின் தூக்கு தண்டனையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த மனு மீதான விசாரணை அவுரங்காபாத் உயர் நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்டது.

ஒ

 தூக்கு தண்டனை கைதிகள்  புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இதில் நிதின், ஜித்தேந்திர பாபுலால் ஷிண்டே  2 பேரும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடர விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

 இதையடுத்து கடந்த 3ஆம் தேதி எரவாடா சிறை சூப்பிரண்டு,  யஷ்வந்த்ராவ் சவான் ,இந்திராகாந்தி ஆகிய பல்கலைக்கழகங்களின் பட்டியலை உயர் நீதிமன்றத்தில் அளித்திருக்கிறார். கோரிக்கை மனு மீதான விசாரணை நடத்திய நீதிபதிகள்,   மனுதாரர்கள் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடர விருப்பம் தெரிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது . அதனால் அவர்களின் விருப்பத்திற்கு மனிதாபிமான முறையில் சிறை அதிகாரிகள் தேவையான உதவிகளை வழங்க வேண்டும்  என்று உத்தரவிட்டுள்ளனர்.