8 பேர் சேர்ந்து சிதைத்ததில் சிறுமிக்கு மனநலம் பாதிப்பு

 
si

எட்டு பேர் சேர்ந்து சிதைத்ததில் சிறுமிக்கு மனநலம் பாதித்திருக்கிறது .  அந்த எட்டு பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

 கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு கொத்தனூர் பகுதியில் வசித்து வருகிறார்  20 வயது இளம்பெண் .  இந்த பெண் கடந்த 2006 ஆம் ஆண்டு சிறுமியாக இருந்தபோது வித்யா ரன்னியபுரம் ம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்டபெட்டா ஹள்ளி பகுதியில் இருக்கும் ஒரு தேவாலயத்தில் தங்கி படித்து வந்திருக்கிறார் .

ss

அப்போது அந்த சிறுமியை சைமன் பீட்டர் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் .  இது குறித்து சிறுமி சாமுவேல் என்பவரிடம் சொல்லி அழுது இருக்கிறார் சிறுமி.  அந்த கொடூரனும் அந்த சிறுமிக்கு உதவுவது போல நடித்து மிரட்டி பாலில் வன்கொடுமை செய்திருக்கிறார்.  

இது குறித்து தெரிந்து கொண்ட தொட்டபெட்ட ஹள்ளியைச் சேர்ந்த கான்டிராக்டர் நாகேஷ் ,பெஞ்சமின், யாகூ, ஜான்சன், நவீன் குமார், பால் அரசு ஊழியர் லோகநாதன் ஆகியோரும் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள் . 

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரைக்கும் பத்து ஆண்டுகளாக சிறுமிக்கு இந்த சித்திரவதை நடந்திருக்கிறது.   இதனால் அந்த சிறுமிக்கு மனநலம் பாதித்ததாக தெரிகிறது.   இதனால் சிகிச்சையில் இருந்த சிறுமி தற்போது குணமடைந்திருக்கிறார்.

 தற்போது 20 வயதாகும் அந்த இளம்பெண்,  கிழக்கு மண்டல மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அந்த எட்டு பேரும் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறை.