சிறுமி தூக்கு போட்டு தற்கொலை -சிறுவன் கைது

 
s

 சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.  மைனரான இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியே வாழ்ந்து வந்த நிலையில் அச்சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

 கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு தொட்ட கம்மனஹள்ளி பகுதியில் பீகாரைச் சேர்ந்த தம்பதி வசித்து வந்துள்ளனர்.  அந்தப் பகுதியில் கட்டுமான வேலைகள் செய்து அவர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.  இந்த தம்பதிய தம்பதி மைனர் ஆவார்கள்.  

arr

 கணவருக்கு 17 வயதும் மனைவிக்கு 15 வயது ஆகிறது.   இருவரும் மைனராக இருக்கும் நிலையில் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். திருமணத்திற்கு பின்னர் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தபோது இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.   மன உளைச்சலில் இருந்த அச்சிறுமி வீட்டில் தூக்கி போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 

 இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்த போது தான் இருவரும்  திருப்பதியில் திருமணம் செய்து கொண்டு பெங்களூருக்கு சென்று அங்கே தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது.  

 இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனமடைந்து தான் அச்சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. 

அச்சிறுமியின் தந்தை துமகூரு பகுதியில்  கட்டுமான வேலை செய்து வருகிறார்.  அவர் போலீசில் அளித்து புகாரில்,  தன்மகள் பீகாரில் இருந்தார் என்றும்,  பீகாரில் இருந்த தன் மகளை அச்சிறுவன் ஆசை வார்த்தை சொல்லி கடத்தி வந்து திருமணம் செய்து கொண்டு,  இப்போது உயிரையும் விடும்படி செய்து விட்டான் என்று புலம்பி இருக்கிறார்.   இது குறித்து  சிறுவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்,   போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் அச்சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள் .  நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அச்சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்து உள்ளனர் போலீசார்.