கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை - பெண் பரிதாப உயிரிழப்பு

 
h

 உடல்நிலை முடியாமல் வீட்டில் சிகிச்சையில் இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை கட்டிப்போட்டு வெறித்தனமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதில் அந்தரங்க பகுதிகளில் கொடூரமாக தாக்கியதில் ரத்தப்போக்கு அதிகமாகி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.  உத்தரப்பிரதேசத்தில் நடந்திருக்கிறது இந்த கொடுமை.

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராம்பூர் மாவட்டத்தில் 28 வயதான மாற்றுத்திறனாளி  ஒருவர் தன் கணவருடன் வசித்து வந்திருக்கிறார்.   கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த பெண்ணுக்கு உடல்நிலை பாதிப்படைந்து இருக்கிறது.  இதனால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.  இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி அன்று பெண்ணின் கணவர் வழக்கம் போல் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று இருக்கிறார்.  மாற்றுத்திறனாளி பெண் வீட்டில் ஓய்வெடுத்து இருந்திருக்கிறார் அந்த பெண் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த முகமது முன் தியாஸ் என்கிற முப்பது வயது வாலிபர் திடீரென்று அத்துமீறி பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து இருக்கிறார்.

b

 அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை கட்டிலில் கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.  அதற்கு அந்த பெண் சம்மதிக்காததால் அப்பெண்ணை கொடூரமாக தாக்கி இருக்கிறார்.   அந்தரங்கப் பகுதிகளில் வெறித்தனமாக தாக்கியிருக்கிறார்.  இதில் பெண் அலறி துடித்து இருக்கிறார்.   சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்திருக்கிறார்கள்.

 அது தெரிந்தது முஹம்மது முன் தியாஸ்அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்.   பாதிக்கப்பட்ட பெண்ணை அப்பகுதியினர் மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளார்கள்.

 தகவல் அறிந்து பெண்ணின் கணவர் மருத்துவமனைக்கு ஓடி இருக்கிறார் .  அங்கே சிகிச்சையில் இருந்த பெண் கணவரை பார்த்ததும் கதறி அழுதிருக்கிறார். தனக்கு நடந்த கொடுமையை சொல்லி அழுது இருக்கிறார்.  அப்போது அங்கு வந்த போலீசார் பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று முகமது முன் தியாஸ் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

 இந்த நிலையில் மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்த அந்த மாற்றுத்திறனாளி பெண் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்திருக்கிறார்.   அப்பெண்ணுக்கு நடந்த பிரேத பரிசோதனையில் அந்தரங்க பகுதிகளில் காயங்கள் அதிகம் ஏற்பட்டு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதால் தான் உயிரிழந்தார் என்று தெரிய வந்திருக்கிறது.  இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.